Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நீட் (NEET) தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பும், அதற்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கமும் தற்போது நாடு முழுவதும் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Republic Tamil

பிரதமர் வெளியிட்ட முதல் வீடியோவில், வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தும் பிரச்சினை எனக் குறிப்பிட்டார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையிலும், வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் வகையிலும் புதிய சட்ட மசோதாவை அரசு கொண்டு வரும் என உறுதியளித்தார்.

இதையும் படியுங்க  "உங்க குழந்தைகளுக்கே இது புரியும்!" - 'Idiot' குட்டி ஸ்டோரி சொல்லி  அதிரவைத்த ராகுல் காந்தி!

இதனைத் தொடர்ந்து, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு ‘செல்ஃபி பாணி’ (Selfie-style Vertical Video) வீடியோவை வெளியிட்ட பிரதமர், முதல் வீடியோவுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Republic Tamil

குறிப்பாக, கேமரா கோணங்கள் (Camera Angles), பிரேமிங் (Framing) உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஆலோசனை வழங்கிய Gen Z இளைஞர்களுக்கு நகைச்சுவையுடன் நன்றி தெரிவித்தார். இந்த இரண்டு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று, மொத்தமாக 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், பிரதமரின் இந்த திடீர் வீடியோ நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களின் புத்திசாலித்தனத்தை அவமானப்படுத்த வேண்டாம்” என்று பிரதமர் மோடியைச் சாடியுள்ளார்.

மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், மாணவர் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களிடம் பிரதமர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதையும் படியுங்க  'ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்காக அனைத்தையும் கொடுத்தார்..! ராகுலின் சென்டிமென்ட் அஸ்திரம் பலிக்குமா..?

இதற்கு பதிலளித்துள்ள பாரதிய ஜனதா கட்சி (BJP), மாணவர்களின் உணர்வுகளை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

Republic Tamil

வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து உயர்கல்வித் துறைச் செயலாளர் வினீத் ஜோஷி மாற்றப்பட்டுள்ளார். மேலும், தேசிய தேர்வு முகமை (NTA)யின் 47 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாணவர் பிரிவுகள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் 26 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், பிரதமர் மோடியின் உறுதிமொழியைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

இதனிடையே, வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்குவதற்கும், வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கும் வழிவகுக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவை அடுத்த வாரத்திற்குள் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  லிவ்-இன் ரிலேஷன்ஷிப்..! அம்மாவை கொன்றுவிட்டு பாத்ரூமை கழுவிய மகள்..! தங்கைக்கும், தந்தைக்கும் நேர்ந்த கொடூரம்!
Republic Tamil

இதேவேளை, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கினர்.

Republic Tamil

ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “நாடு முழுவதும் இதுவரை 150-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதுவரை குற்றவாளிகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார். மேலும், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago