Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சினிமாவில் இருந்து கோட்டைக்கு வந்து முதலமைச்சர் நாற்காலியில் ஜம்மென அமர்ந்த ஜோசப் விஜய்யை, அடுத்த கட்டமாகத் தேசிய அரசியலை நோக்கி நகர்த்த அவரது ‘ரூட் மாபியா’ குழுவினர் மிகப்பெரிய சீக்ரெட் ப்ளான்களை வகுத்து வருவதாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது.இதுகுறித்த தகவல்கள் மத்திய உளவுத்துறை, சைபர் கிரைம் வட்டாரங்கள் வழியே கசிந்துள்ளன.

‘ரூட் மாபியா’ ஜெகதீஷின் அடுத்த டார்கெட்
போலியான டெலிகிராம், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்துத் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, தவெக-வை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியதில் ஜெகதீஷ் தலைமையிலான ‘ரூட் மாபியா’ குழு முக்கியப் பங்கு வகித்தது. ”எதிர்பார்த்தபடியே விஜய்யை தமிழக சி.எம் ஆக்கியாச்சு… இனி இவர்களின் வேலை முடிந்தது” என நினைத்த வேளையில், ஜெகதீஷ் தற்போது அடுத்த பலே திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். அது, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவதுதான்.

கோடம்பாக்கத்தினரின் குமுறல்கள்
சோசியல் மீடியாவில் தங்களை ‘கிங்’ ஆகக் காட்டிக்கொள்ளும் இந்த ரூட் மாபியா குழு, திரைத்துறையில் தங்களுக்கு ஒத்துவராத நடிகர், நடிகைகளைக் குறிவைத்துத் தாக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடிகை பிரியங்கா மோகன் பெயர் குறிப்பிடாமல், “தன்னுடைய தொழில் வாய்ப்பைக் கெடுக்கிறார்கள்” என மறைமுகமாகத் தாக்கினார். அவரைத் தொடர்ந்து நடிகை ஓவியாவும், “ரூட் மாபியாவை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டும்” எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாகப் பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்க  அமைச்சர் ஆய்வில் ஆப்சென்ட்… சொந்தத் தொகுதியில் சைலன்ட் மிஸ்ரா..! தேனி தவெக-வில் வெடித்த 'லெப்ட் - ரைட்' மோதல்..!

‘தமிழ் விஜய்’ டூ ‘ஹிந்தி விஜய்’
மத்திய உளவுத்துறையின் கணிப்புப்படி, தென் மாநிலங்களில் உள்ள மொத்தமுள்ள 141 நாடாளுமன்றத் தொகுதிகளில் 110 தொகுதிகளைக் கைப்பற்ற டார்க்கெட் வைக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வடக்கே போதிய ஆதரவு இருந்தாலும், அகில இந்திய அளவில் மக்களைக் கவரக்கூடிய வலுவான ‘வசீகரத் தலைவர்’ அங்கு இல்லை.

இதனால், விஜய்யைத் தேசியத் தலைவராக முன்னிருத்தி பிரதமர் வேட்பாளராக முன்மொழியக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே ஜெகதீஷின் ரூட் மாபியா குழு சமூக வலைதளங்கள் மூலம் தமிழ்நாட்டு விஜய்யை ‘ஹிந்தி விஜய்யாக’ மாற்றி வருவதாகவும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் ஃபேக் ஐடி
விஜய்யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.8 கோடி ஃபாலோவர்ஸ் இருக்கும் நிலையில், தற்போது இந்தி, தெலுங்கு மொழிகளிலும் அதே அளவிற்கு ஃபாலோவர்ஸ் இருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டு வருகிறது.

‘TVK Vijay Headquarters’, ‘Thalapathy Vijay Hindi FC’, ‘Vijay Hindi Fans Official’ மற்றும் ‘Vijay Fans UP’ என்ற பெயர்களில் எக்ஸ், இன்ஸ்டா, ஃபேஸ்புக் பக்கங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ரசிகர் பக்கங்களில் திடீரென லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் அதிகரித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "ஒரு அமைச்சரவை தரல.. தலித்-ஐ பேச விடமாட்டீங்க!" - 'SOFA' மாடலுக்கு வன்னியரசு கொடுத்த  மாஸ் விளக்கம்!

உளவுத்துறை சைபர் கிரைம் நோட்டம்
விஜய்யை மட்டுமே போற்றிப் பாடும் இந்த வடமாநில சோசியல் மீடியா கணக்குகளைப் பின்னணியில் இருந்து இயக்குவது யார்? அவர்களின் உண்மையான முகவரிகள் என்ன? இதில் ஏதேனும் தேசவிரோத அல்லது தீவிரவாதப் பின்னணிகள் உள்ளதா? என்பது குறித்து மத்திய உளவுத்துறை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தேசிய சைபர் கிரைம் முகமை தனிப் படைகளை அமைத்துக் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago