https://republictn.com/

இந்தியா கூட்டணியின் கூட்டம், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள், திமுக கூட்டணி குறித்து ராகுல் காந்தி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவில், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், நாட்டைப் பாதுகாக்கவும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று பாஜகவும், ஊடகங்களில் உள்ள அவர்களின் நண்பர்களும் பொய் பிரச்சாரங்களை பரப்பி வருகிறார்கள். இந்த கருத்துக்கள் முற்றிலும் உண்மையற்றவை என்று ராகுல் காந்தி மறுத்துள்ளார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் பன்முகத்தன்மையையும் காப்பதில் திமுக எப்போதும் உறுதியாக இருக்கும் என்று தம்மால் 100% உறுதியளிக்க முடியும். கூட்டணி முறிந்தாலும் இந்தியா கூட்டணியை திமுக ஆதரிக்கும்”என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் திமுக பங்கேற்காத நிலையிலும், ராகுல் காந்தி இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். ‘இந்தியா’ என்ற விழுமியத்தைப் பாதுகாக்க இந்த அறையில் இருக்கும் ஒவ்வொருவரும் திமுக-வுடன் கைகோர்த்து நிற்பார்கள் என்றும் அவர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைகள் குறித்து கேரளா முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ராகுல் காந்தியின் தற்போதைய செயல்பாடுகள் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக இல்லை என்றும், அவை பாஜகவிற்கே சாதகமாக அமைந்து பலன் தரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த அணுகுமுறை குறித்து தாங்கள் மட்டுமன்றி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பிற கூட்டணித் தலைவர்களும் அதிருப்தி அடைந்து விமர்சித்துள்ளதாக பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தற்போது எங்கே நிற்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று கூறி, இந்தியா கூட்டணியின் தற்போதைய நிலைக்கு ராகுல் காந்தியின் செயல்பாடுகளே காரணம் எனப் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago