Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மிசா விவகாரம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நேற்று நடத்தினர். அப்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு அன்றைய ஆளுநரை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஓட விட்டார். இன்று முதல்வர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் ஓட விடுகிறார். திமுக இன்று அடிபட்ட புலியாக களத்தில் நின்று கொண்டிருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் வட்டியும் முதலுமாக சேர்த்து கொடுப்போம் என்று காட்டமாக பேசினார்.

அதேபோல் சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.யும் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஆ.ராசா பேசுகையில்: தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது. மேலும் பேசுகையில் ஒரு மந்திரி இருக்கிறார். அவர் மந்திரியா? எங்கே படித்தார் என்னவென்று தெரியவில்லை. குரங்கு மரத்துக்கு மரம் தாவுகிற மாதிரி கட்சிக்கு கட்சி தாவி தாவி இங்கு உட்கார்ந்திருக்கிறார். அவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என்கிறார். எனக்கும் தான் ஒரு சந்தேகம் இருக்கிறது, நீ யாருக்கு பொறந்தே என்று? ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு கனிமொழி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆ.ராசாவின் இந்த பேச்சு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்க  மெஜாரிட்டி கிடைக்காத த.வெ.க…! ஆட்சி அமைப்பதில் சிக்கல்? மீண்டும் வருகிறது தேர்தல்..?

இதுதொடர்பாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா ஸ்டாலின்? நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள் மு.க.ஸ்டாலின்?

எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு. தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா மு.க.ஸ்டாலின்?

திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா மு.க.ஸ்டாலின்? குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.

இதையும் படியுங்க  மின்சார வாரியத்தில் ஊழல்..! தடயங்களை அழிக்க ‘18 ஹார்டு டிஸ்க்குகளை திருடிய திமுகவினர்..!? நள்ளிரவில் சிக்கிய க்ளூ!

நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago