Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

English letter

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம்… திருப்பத்தூர் சாலையில் அமைதியாக இயங்கி வந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, இன்று தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

காரணம், கல்லூரி வளாகத்திலேயே நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததும் ?, அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் ஒரு ஆங்கிலக் கடிதமும்தான்.

கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தவர் A.N.சேகர். சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தவர், வளாகத்தில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்ததாகவும் . பதறிப்போன பேராசிரியர்கள், ஊழியர்கள் அவரைத் தூக்கிக்கொண்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ஓடியதில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்” என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின

இந்த மரணம் ஒருபுறம் இருக்க சேகரால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில் இருந்த அதிர்ச்சி வரிகள்! இது இயற்கை மரணமா, மாரடைப்பா என்று கல்லூரியே கலங்கி நின்றபோதுதான், சமூக வலைதளங்களில் அந்தக் கடிதப் புகைப்படம் வைரலாகத் தொடங்கியது.

இதையும் படியுங்க  ஸ்கெட்ச் போட்ட நெருங்கிய நபர்கள்? 5 லட்சத்திற்காகப் பள்ளி மாணவன் கடத்தல்… திருப்பத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

சேகர் கையெழுத்துடன் இருப்பதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில்

இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:”MY SACRIFICE IS TO SAVE THE TRUST, STAFFS and STUDENTS AND FEW POOR LADY TRUSTEES FROM THE ARAKKAN VIJAYARAJ. HE WILL RUIN THE TRUST. LIKE R.I.T.” + அரக்கன் விஜயராஜிடமிருந்து அறக்கட்டளையையும், ஊழியர்களையும், மாணவர்களையும் காப்பாற்றவே என் தியாகம். அவன் அறக்கட்டளையை அழித்துவிடுவான்” என்பது அதன் சாராம்சம். இறுதியில், “அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று முடித்திருக்கிறார்.

யார் அந்த ‘அரக்கன்’?

கடிதத்தில் ‘விஜயராஜ்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் யார், அறக்கட்டளையில் அவருக்கு என்ன பங்கு, ‘R.I.T. போல அழித்துவிடுவான்’ என்றால் என்ன அர்த்தம் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இது கடிதத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு மட்டுமே என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். சேகரின் உறவினர்கள் தரப்பில் “அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது” என்று வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  Premium runs replicate the last form

போலீஸ் என்ன சொல்கிறது?

உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், மாரடைப்பா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடிதம் உண்மையில் சேகர் எழுதியதுதானா, ? அவரது கையெழுத்துதானா? என்ற தடயவியல் சோதனையும், அறக்கட்டளைக்குள் நிர்வாகப் பூசல் ஏதும் உள்ளதா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது ஒரு கல்வி அறக்கட்டளையின் உள் விவகாரம், ஒரு நிர்வாகியின் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றதா? அந்தக் கடிதத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே விடை தெரியும்.

வாணியம்பாடியே இப்போது அந்த அறிக்கைக்காகத்தான் காத்திருக்கிறது.

இது சம்பந்தமாக அப்பகுதியில் இருப்பவர்களிடம் பேசினோம் அது “பெண் பெயரில்” இயங்கும் இன்ஜினியர் காலேஜ் மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி தலைமையிலான 10 பேர் கொண்ட நிர்வாகிகள் தொடங்கிய அறக்கட்டளை கிழ் இயங்கி வந்த கல்லூரி அது , இறந்த சேகர் ஆற்காட்டை சேர்ந்தவர் சிங்கப்பூர் ரிட்டர்ன் அவர் அங்கு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்திருந்தார் அந்த கல்லூரியில் பல ஆண்டுகளாகவே நிர்வாகிகள் மத்தியில் பிரச்சனை ஓடிட்டு இருக்கு, அவர் கடிதம் எழுதி வைததாக சொல்லப்படும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஜயராஜ் யார் என தெரியவில்லை மறைந்த எம்பி குடும்பத்தினர் மூன்று பேர் பங்கு தாரர்களாக உள்ளனர் அதில் ஒருவர் பெயர் கூட விஜய் என நினைக்கிறோம், உண்மை போலீசார் விசாரணைக்கு பிறகு தெரியவரலாம் என்றனர்

இதையும் படியுங்க  “There are over 7000 e-juice flavors in the marketplace

தொடர்புடைய தரப்பினரின் விளக்கம் கிடைத்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago