Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Lakshmanan vs. Parthiban

முளைச்சு மூணு இலை விடல… அதுக்குள்ள கோஷ்டி சண்டையா?’

தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மண்ணில் இப்போது ஓங்கி ஒலிக்கும் கேள்வி இதுதான்! -ஒருபக்கம் போக்குவரத்துத் துறை அமைச்சரும், சேலம் தெற்கு எம்.எல்.ஏவுமான விஜய் தமிழன் பார்த்திபன். மறுபக்கம் சேலம் மேற்கு எம்.எல்.ஏவும், மேற்கு மாவட்டச் செயலாளருமான லட்சுமணன். இந்த இரண்டு ‘மாஸ்’ முகங்களுக்கு இடையே நடக்கும் அதிகார மோதல், கட்சியின் உள்விவகாரமாக இல்லாமல் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கிறது.

இரண்டு ஹீரோக்கள், ஒரே மண்! 2026 தேர்தலில் சேலம் மேற்கில் களமிறங்கிய மாஜி போலீஸ் இன்ஸ்பெக்டரும், ரியல் எஸ்டேட் அதிபருமான லட்சுமணன், 1,20,407 வாக்குகள் பெற்று பாமக வேட்பாளரை 74,867 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தமிழகத்திலேயே டாப்-5 வித்தியாச வெற்றிகளில் இதுவும் ஒன்று!

சேலம் தெற்கில் போட்டியிட்ட விஜய் தமிழன் பார்த்திபன் 91,371 வாக்குகள் பெற்று, 33,369 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தொடக்கத்திலிருந்தே சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து, பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தையும் கையில் எடுத்தவர் இவர்.

ஒருவர் பண பலம்… மற்றொருவர் கட்சி பலம்! சேலம் தவெக பிளவுபட்டதன் தொடக்கப் புள்ளி இதுதான்.

‘ஓட்டுக்கு ரூ.2,000’ – சக கட்சிக்காரரே வீசிய குண்டு!

தேர்தலுக்குப் பிறகு முதல் வெடிகுண்டை வீசியவர் ஓமலூரில் தோற்ற தவெக வேட்பாளர் அதியமான். தீவட்டிப்பட்டியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “என் தோல்விக்கு முக்கிய காரணம் சேலம் மேற்கு தொகுதிதான். அங்கு போட்டியிட்ட நம்ம கட்சி வேட்பாளர் 100 சதவீதம் எல்லா இடங்களிலும் ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு நாளில் என் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்டது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அந்த வீடியோவை கட்சியினரே சமூக வலைதளத்தில் பரப்ப, தவெக வட்டாரம் அதிர்ந்தது.

அதேசமயம், அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் பெயரைச் சொல்லி கட்சி நிர்வாகி ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாக ஒரு ஆடியோவும் பரவியது. அதையும் கட்சியினரே வெளியிட்டதாகச் சொல்கிறார்கள். ‘ரீல்ஸ் போட்டு ஆட்சியைப் பிடித்தோம்’ என்று மார்தட்டும் தவெகவினர், உட்கட்சிப் பிரச்னையையும் ரீல்ஸ் மோகத்தில் பரப்பி வருகின்றனர் என்று கிண்டலடிக்கிறது அரசியல் வட்டாரம்.

இதையும் படியுங்க  "BLAST இல்ல.. WASTE!" — முதல்வர் விஜயை 'ரீல்ஸ் கிரியேட்டர்' என கிழித்து தொங்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

அமைச்சரின் ‘நிழல் யுத்தம்’  சேலம் வடமேற்கு மாவட்டத்தில் கோஷ்டி சண்டையால் இரு துருவங்களாகப் பிளவுபட்டுள்ள நிலையில், நிர்வாகிகள் இடையேயான மோதலைத் தூண்டிவிட்டு அமைச்சர் ‘சைலண்டாக ரசிப்பதாகவும் 

வடமேற்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், சங்ககிரி மற்றும் ஓமலூரில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது, அமைச்சரின் ஆதரவாளரான சங்ககிரி நகரச் செயலாளர் மணிகண்டன், ‘கட்சித் தலைமை உத்தரவுப்படி மகுடஞ்சாவடியில்தான் கூட்டம் நடக்கும்; சங்ககிரியில் அனுமதி தர வேண்டாம்’ என்று காவல்துறைக்கு கைப்பட கடிதம் எழுதினார் 

 ஓமலூரில் அமைச்சரின் ஆதரவாளர் அதியமான் எதிர்ப்பு தெரிவிக்க, மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூரில் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு மட்டும் காவல்துறை அனுமதி அளித்ததால் பூடகமாக இருந்த கோஷ்டி சண்டை இதன் மூலம் வெட்டவெளிச்சமானது.

’25 லட்சம் தேர்தல் நிதி’ – பரபரக்கும் உட்கட்சி குற்றச்சாட்டு! உட்கட்சி விவரப்புள்ளிகள் நம்மிடம் பேசுகையில், “தவெகவில் கட்சிக் கட்டுப்பாடு, புரோட்டாகால் மரபுகள் எதுவும் இல்லை. ஒ.செ., ந.செ. பொறுப்பிலிருக்கும் சின்னப்பசங்ககூட வடமேற்கு மா.செ.வுக்குக் கட்டுப்படுவதில்லை. போக்குவரத்துத் துறை அமைச்சரும் சேலம் மத்திய மா.செ.வுமான விஜய் தமிழன் பார்த்திபன், பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தங்க நாணயச் சீட்டுத் திட்டங்களை நடத்திவருகிறார். கட்சி நிர்வாகிகள் பலரும் அவரிடம் சீட்டுத்திட்டத்தில் பணம் செலுத்தி வருகின்றனர்” 

மேலும், “சட்டமன்றத் தேர்தலின்போது வடமேற்கு மா.செ. செந்தில்குமாரிடம் தேர்தல் நிதியாக 25 லட்சம் ரூபாய் கேட்டு அமைச்சர் தினமும் போன் செய்துகொண்டிருந்தார். உடனடியாகப் பணம் புரட்ட முடியாததால், ஏற்கனவே தங்க நாணய சேமிப்புத் திட்டத்தில் 15 லட்சம் செலுத்தியிருப்பதாகவும், அதை முதல் தவணையாக வைத்துக்கொள்ளுங்கள் என்றும் செந்தில்குமார் சொன்னார். இந்த இடத்தில்தான் அமைச்சருக்கு அவர் மீது மனக்கசப்பு ஏற்பட்டது” என்கிறார்கள்.

சங்ககிரி சீட் விவகாரத்தில், தொழிலதிபர் அதியமானை முதலில் சங்ககிரியில் நிறுத்த அமைச்சர் முடிவு செய்திருந்தார்  அதற்காக அதியமான் தரப்பிலிருந்து ‘வெயிட்டான ஸ்வீட் பாக்ஸ்கள்’ கைமாறியது ஆனால், கட்சி மேலிடத்திலுள்ள ஒருவர் மூலம் செந்தில்குமார் சீட் பெற்றதால், தன்னை மீறி சீட் பெற்றுவிட்டதாகக் கருதி அப்போது முதல் அவரை வெளிப்படையாகவே ஓரங்கட்டத் தொடங்கினார் பார்த்திபன் 

இதையும் படியுங்க  "யாரும் ஓடிடக் கூடாது..!" விஜய் தெறிக்க விடப்போகும் அந்த மாஸ் சம்பவம் இதுதான்..! தமிழக போலீஸே அலறப்போகுது.!

‘சைலண்ட் ரசிகர்’ அமைச்சர் Vs ‘மாஸ்’ எம்.எல்.ஏ! இதன் தொடர்ச்சியாகத்தான், வடமேற்கு மா.செ. ஏற்பாடு செய்திருந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு முட்டுக்கட்டை போட்டார்  அமைச்சர் , 

தனது ஆதரவாளர்களை செந்தில்குமாருக்கு எதிராகக் கொம்பு சீவிவிட்டு சைலண்டாக ரசிப்பதாக உட்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். விரைவில் செந்தில்குமாரின் இடத்திற்கு தற்போது இ.செ.வாக உள்ள இளம்பரிதியைக் கொண்டுவரவும் அமைச்சர் திட்டமிட்டிருக்கிறார் 

இதற்கிடையே, அக்டோபரில் நடந்த தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் பேசியபோது, மேற்கு மாவட்டச் செயலாளரான லட்சுமணன் தலைமை வகித்தார் . இது  வெளியே ஒற்றுமை நாடகம்… உள்ளே அதிகார யுத்தம்! என கட்சியினர் கிசுகிசுக்கிறார்கள் 

காக்கிச்சீருடை ‘டான்’ Vs ரசிகர் மன்ற ‘தளபதி’! இந்த மோதலின் வேரைப் புரிந்துகொள்ள இருவரின் பின்புலத்தையும் பார்க்க வேண்டும். ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டது அது!

Oplus_16908288

லட்சுமணன் – பூர்வீகம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம். கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் சேலம் மாநகரக் காவல்துறையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர். 1999-ல் திருட்டு வழக்கில் சிக்கிய ராஜா என்ற வாலிபரை விசாரணைக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றபோது, லட்சுமணன் வைத்திருந்த கைத்துப்பாக்கி வெடித்து ராஜா உயிரிழந்தார். இந்த கஸ்டோடியல் டெத் வழக்கில் 90 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலையானார். அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டியார் பெரிதும் உதவியதாகச் சொல்லப்பட்டது  வீரபாண்டியார் உயிரோடு இருந்தவரை அவரை ‘அப்பா’ என்றே அழைத்து வந்தார் 

‘காக்கிச்சீருடை அணிந்த கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரியல் எஸ்டேட் மாஃபியா’ என்று வர்ணிக்கப்படும் இவர், அங்கம்மாள் காலனி விவகாரம், ரோலர் பிளவர் மில் அதிபரை மிரட்டியது என தொடர் சர்ச்சைகளில் சிக்கி, 2014-ல் காவல்துறையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 

இதையும் படியுங்க  Shop one of the UK’s largest ranges of vape e-liquids

பின்னர் முழுநேர ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, சேலம், நாமக்கல், ஓசூர், வேலூர், பெங்களூர் என பல இடங்களில் சில ஆயிரம் கோடிகளைக் குவித்ததார்  ஆரம்பத்தில் அ.தி.மு.க-வில் சீட் கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பை அணுகியும் ‘புரபைல் சரியில்லை’ என்று மறுக்கப்பட்டதால், மாஜி ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் மூலம் தவெகவில் சேர்ந்தார் 

அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் –  நாயூடு சமூகத்தைச் சேர்ந்தவர் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். புஸ்ஸி ஆனந்துடனான நெருக்கத்தால் விஜய் படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார். தொடக்கத்திலிருந்தே சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர். தி.மு.க-வின் வீரபாண்டியார் இருந்தவரை அவரது ஆதரவாளராகவும் இருந்தார் 

மோதலின் அடிப்படை  பணம் Vs அமைப்பு!

சுருக்கமாகச் சொன்னால், லட்சுமணன் = காக்கி பின்புலம் + ரியல் எஸ்டேட் பண பலம் + அமோக தேர்தல் வெற்றி. ஆனால் கட்சி அமைப்பில் புதியவர்.

பார்த்திபன் = ரசிகர் மன்ற காலத்திலிருந்தே கட்சி அமைப்பு + அமைச்சர் பதவி + மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பு. “சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் பார்த்திபன்தான் உச்ச அதிகார மையம்” 

ஒருவர் பணத்தால் அதிகாரம் செலுத்த, மற்றொருவர் அமைப்பால் அதிகாரம் செலுத்த… இந்த இரு துருவ ஈர்ப்புதான் சேலம் தவெகவைப் பிளந்து கொண்டிருக்கிறது.

“தவெகவுக்கு வேண்டுமானால் புஸ்ஸி ஆனந்த் பொ.செ.வாக இருக்கலாம். ஆனால், சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர்தான் உச்சம்” என்கிறார்கள் பார்த்திபன் தரப்பு. “முளைச்சு மூணு இலை விடல… அதுக்குள்ள கோஷ்டி சண்டையா?” சேலத்தை பொருத்தவரை மிகப்பெரிய சமூகமான வன்னியர் பெல்ட்  இருவருக்குமே அவர்கள் சாதி வாக்குகள் அடிப்படையில் இங்கு மைனாரிட்டி வாக்குகள்தான் விஜய் அலையால் சமூகம் பார்க்காமல் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் பிற கட்சிகளிலிருந்து தாவிய சீனியர்கள்.

இந்த மோதல் தலைமையின் கவனத்திற்குச் செல்லுமா, அல்லது சேலம் மண்ணில் பெரும் வெடிப்பாக மாறுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago