Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Stalin vijay

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மு.க.ஸ்டாலினின் தாடையில் கை வைத்து உடல் மொழியை கிண்டல் செய்யும் வகையில் சைகை செய்து காட்டியது குறித்து அரசியல் களத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் விஜய்யின் இந்தச் செயலை உருவக் கேலி, அரசியல் முதிர்ச்சியற்ற செயல் எனப் பலமாகக் கண்டித்துள்ளன.

இது வெறும் அரசியல் ரீதியான நையாண்டி மட்டுமே தவிர, யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கண்டித்து பதிலடி கொடுத்துள்ள திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் வெளியிட்டுள்ள வீடியோவில், ”வெட்கங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, மானங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, தொடை நடுங்கி விஜய் அவர்களே, உங்களுக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை, ரோஷம் எதுனா இருந்தா, எங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் 15 கேள்வி கேட்டார் அதற்கு பதில் இருக்கா.?

ஸ்ரீவைகுண்டத்தில் உங்களது எம்.எல்.ஏ தப்பு செய்திருக்கிறார். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எனக் கேட்டார். அதற்கு பதில் இல்லை. உங்கள் கட்சிக்காரர்கள் கஞ்சா கடத்துகிறார்கள் எனக் கேட்டார் அதற்கு பதில் இல்லை. வேதாரண்யத்தில் உங்கள் கட்சியை சேர்ந்த ஒன்றியச் செயலாளர் இலங்கைக்கு கஞ்சா கடத்துகிறார் என்று கேட்டார். அந்தக் குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளில் வந்திருக்கிறது என்று கேட்டோம், அதற்கு பதில் இல்லை.

இதையும் படியுங்க  தவெக-வின் 'வீக்-எண்ட்' பிளான்: ஆடிப்போய்க் கிடக்கும் எடப்பாடி..! அதிமுகவில் அசுர ஸ்கெட்ச்..!

பாலியல் தொல்லை கொடுத்து உங்கள் கட்சி பெண்மணி உங்கள் மாவட்டச் செயலாளர் மீது குறை சொல்லி இருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன? இதற்கெல்லாம் பதில் சொல்ல யோக்கிதை இல்லாமல், தைரியம் இல்லாமல், தொடை நடுங்கி முதலமைச்சர், கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், கூச்சமில்லாமல், எதிர் கட்சி தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல், இன்னிக்கு ஓடு ஒடு என ஓடி இருக்கிறீர்களே… கரூரில் 41 பேர் உயிரிழந்தார்களே. அதை எதிர்கொள்ளக் கூடிய துணிச்சல் உங்களுக்கு இருந்ததா? அப்போது பிடித்து உங்களை உள்ளே போட்டிருந்தால் சிறைவாசம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

கரூரில் கீழே விழுந்து மயங்கி செத்துக் கிடக்கிறார்கள். அதைக் கூட நீ கவனிக்காமல் பஸ் மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்த சைக்கோ தான் முதலமைச்சர் விஜய். மனித உயிர் விலை மதிப்பில்லாதது. அங்கே கரூரில் இருக்கக்கூடிய உயிர்கள் எல்லாம் மயங்கி கீழே விழுகிறது. செத்துக் கிடக்கிறார்கள். அதைப் பார்த்தும் பார்க்காதது போல பாட்டுப்பாடி பிரச்சாரம் செய்த சைக்கோ விஜய்க்கெல்லாம் தமிழ்நாட்டுடைய தியாக வரலாறு தெரியாது. எங்கள் தலைவருடைய தியாகத்தைப் பற்றி தெரியாது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  மகன் தமிழக அமைச்சர்..! பெற்றோர் இன்றும் கூலித் தொழிலாளிகள்..! தமிழக அரசியலின் ஆகச்சிறந்த உத்வேகம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago