தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற வி.எஸ். பாபுக்கு இன்று அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
வி.எஸ். பாபு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் தவெகவினரும் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளது.
