Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள சூழலில், முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், தனது கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பாராளுமன்ற, சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒரு புதிய அதிரடி அரசியல் வியூகத்தை வகுத்து வருகிறார்.

234 மாவட்டச் செயலாளர்கள்
தற்போது தவெக-வில் மாநிலம் முழுவதும் மொத்தம் 132 கட்சி மாவட்டங்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இந்த உட்கட்டமைப்பை முற்றிலும் மாற்றி, தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளையும் தனித்தனி கட்சி மாவட்டங்களாகக் கருதி, 234 தொகுதிகளுக்கும் 234 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பாரம்பரியக் கட்சியும் செய்யாத இந்த அதிரடி மாற்றம், அடிமட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.

புதிய வியூகத்தின் முக்கிய அம்சங்கள்
‘ஜென்சி’ தலைமுறையைக் கவர்ந்துள்ள விஜய், கட்சியில் தற்பொழுது எம்.எல்.ஏ-க்களாக இருந்து மாவட்டச் செயலாளர் பதவி இல்லாதவர்களுக்கும், புதிய இளைஞர்களுக்கும் இந்த மாவட்டச் செயலாளர் பதவிகளை வழங்க முன்னுரிமை அளிக்கவுள்ளார்.

இதையும் படியுங்க  "கைதா? நீதிமன்ற பாதுகாப்பா? உதயநிதி வீட்டின் முன் குவிந்த போலீஸ்.. தமிழக அரசியலில் திடீர் புயல்!"


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக சுமார் 10 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, அந்தத் தொகுதிகளை முதற்கட்டமாக டார்க்கெட் செய்து, மாற்றுக்கட்சிகளிலிருந்து இணையும் முக்கியப் பிரமுகர்களுக்கு அந்தந்தத் தொகுதி மாவட்டச் செயலாளர் பதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

சீனியர்களுக்கு செக்
கட்சியில் உள்ள சில மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தேவையின்றி பேசுவதாகவும், தொண்டர்களை நிந்திப்பதாகவும் தலைமைக்குப் புகார்கள் சென்றுள்ளன. இதனால் அவர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சில சீனியர்களின் பதவிகளைப் பறிக்கவும் இந்த வியூகம் பயன்படும் எனக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சவால்
ஏற்கனவே அதிமுக-விலிருந்து சுமார் 25 சதவீத முக்கியப் பிரமுகர்கள் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் தவெக-வின் கையில் அதிகாரமும் படையும் இருப்பதால், விஜய்யின் இந்த அதிரடி அறிவிப்பு எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் பரிசாக வரும் அறிவிப்பு?
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி அன்று, இந்த “234 தொகுதி-மாவட்டச் செயலாளர்கள்” குறித்த அதிகாரப்பூர்வ மாஸ் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 60 ஆண்டுகால திமுக, அதிமுக ஆளுமைக்குச் சவால் விடும் வகையில், அடிமட்ட அளவில் கட்டமைப்பைத் தலைகீழாக மாற்றும் விஜய்யின் இந்த புதிய வியூகம் எந்தளவுக்கு வேலை செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இதையும் படியுங்க  அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு..! விஜய் சந்தோஷப்படணுமா..? கவலைப்படணுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago