Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை, முதலமைச்சரின் செயலாளர் செந்தில் குமார் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றிருந்தாலும், இன்னும் அவர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதனிடையே, அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகவே முதலமைச்சரின் செயலாளர் செந்தில் குமார் ஆளுநரை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு 10 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆலோசனை முடிவடைந்த பின்னரே, அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் தேதி, பதவியேற்பு விழா நடைபெறும் இடம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியாகும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago