உச்ச நீதிமன்றத்தில் மிக காஸ்ட்லி வக்கீலை இறக்கியும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டு இருக்கிறது உச்சநீதிமன்றம். கே.என்.நேரு கைதாவதற்கு இப்போது மாதக்கணக்கோ அல்லது வாரக்கணக்கெல்லாம் இல்லை. நாள் கணக்கில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள்.
என்னங்க நாள்கணக்கு அப்படின்னா தீபாவளி வருதே.. எனக் கேட்டால் கே.என்.நேருவுக்கு இந்த வருட தீபாவளி வீட்டிலேயா? இல்லை அன்பில் மகேஷ் இருக்கிற அடுத்த அறையிலா என திமுக வட்டாரத்தில் ஒரு மாபெரும் புயல் வீசிக் கொண்டு இருக்கிறது. பலம் வாய்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி எம்எல்ஏவுமான கே.என்.நேருவுக்கு வந்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சட்ட சிக்கல்தான் இப்போ ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் உற்றுப் பார்க்க வைத்துள்ளது.
கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது பதியப்பட்ட ஊழல் மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளில் அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சூடு பிடித்து நகர்ந்து கொண்டு இருந்தது. பொதுவாவே நம் அரசியல்வாதிகள் மீது இருக்கிற இந்த ஊழல் வழக்குகள் எல்லாம் வருஷக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டே போகும். ஆனால் இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் ரொம்பவே கண்டிப்பாக நடந்து கொண்டது மட்டுமில்லால் நேரு தரப்புக்கு ஒரு கடும் நெருக்குதலையும் கொடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடியை எதிர்த்தும் தனக்கு எப்படியாவது ஒரு ரிலீப் கிடைக்கணும் என நினைத்து கே.என்.நேரு நேராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அப்பீல் மனுவை தட்டிவிட்டார். ”சுப்ரீம் கோர்ட்டுக்கு போனா எப்படியும் நமக்கு சாதகமா ஒரு ஸ்டே வாங்கிடலாம். கொஞ்ச நாள் ஃப்ரீயா சுத்திட்டு அந்த அடுத்த கட்ட பிளான் என்ன அப்படின்னு அதை பிளான் பண்ணிக்கலாம்” என நினைத்து நேரு தரப்பு ரொம்பவே நம்பிக்கையாகக் கணக்கு போட்டது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்ல நடந்த கூத்தே வேற. உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அந்த பெஞ்சுக்கு முன் இன்று நேருவின் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குல நேருவை காப்பாற்றுவதற்காக டெல்லியில் இருந்து யாரு களத்தில் இறங்கியது தெரியுமா? இந்தியாவிலேயே மிக காஸ்ட்லி வழக்கறிஞரான ஷயாம் திவான். இந்த ஷயாம் திவான் யார்? இவரோட ஹிஸ்டரி ரொம்ப பெருசு. அதனால இவரை பற்றி ஒரு சின்ன மேட்டர் மட்டும் சொல்கிறோம்.
அதை வைத்து இவர் எவ்வளவு பெரிய ஆள் என நீங்களே புரிஞ்சுக்கலாம். இந்த ஷயாம் திவான் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு முறை ஒரே ஒரு சிட்டிங்கில் ஆஜிராகி வாதாடுவதற்கு மட்டுமே 25 லட்சம் ரூபாய்க்கு மேல் பீஸ் வாங்குகிற ஒரு டாப் மோஸ்ட் வக்கீல். இவரை வைத்து வாதாடினால் நிச்சயமாக வழக்கு நம்ம பக்கம் சாதகமா திரும்பிடும் என நேரு தரப்பு இவரை இறக்கி ஆட்டம் காட்டினார்கள். நீதிபதிகள் முன்னாடி ஆஜரான வழக்கறிஞர் ஷயாம் திவான் ரொம்பவே ஆக்ரோஷமாக தன்னோட வாதத்தை பொரிந்து தள்ளினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு பதில்மனு தாக்கல் செய்ய கூட போதுமான அவகாசம் கொடுக்கவில்லை. எடுத்த எடுப்பிலே அவசர அவசரமா எங்களுக்கு எதிரா ஆர்டர் போட்டு விட்டார்கள். அதனால் இதற்கு இடைக்கால தடை கொடுக்கணும் என ரொம்ப வலுவாக விவாதம் செய்தார். ஆனால் இருதருப்பு வாதங்களையும் ரொம்ப பொறுமையாகக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் நேரு தரப்புக்கு இவ்வளவு பெரிய காஸ்ட்லி வக்கீல் ஆஜராகியும் அதை கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை.
கடைசியா நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவை அதிரடியாக டிஸ்மிஸ் பண்ணி தூக்கி அடித்துவிட்டார்கள். உண்மையாவே இந்த உத்தரவு என்பது நேரு தரப்புக்கு தலையில் விழுந்த மிகப்பெரிய ஒரு இடி. சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடியான அடுத்த செகண்டே நேரு தரப்பு வழக்கறிஞர்கள் எல்லாம் அடுத்து என்ன செய்வது என சீரியஸான ஆலோசனையில் இறங்கி விட்டார்கள்.
இப்போதைக்கு அவர் முன் இருக்கிற ஒரே ஆப்ஷன் முன்ஜாமின் வாங்குவது மட்டும்தான். ஆனால் இந்த முன்ஜாமீன் வேணும் என்றால் அவர் மறுபடியும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கே வந்தாக வேண்டும். இங்கேதான் நேரு தரப்புக்கு ஒரு மிகப்பெரிய ஆப்பே காத்துக் கொண்டு உள்ளது.

ஒருவேளை ஹைகோர்ட்டுக்கு சென்று அங்கே முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடியாகி விட்டால் நிலைமை இன்னும் கைமீறி போய்விடும். உடனே கைது செய்வதற்கான வாய்ப்புகள் 100% உறுதியாகி விடும். அதனால் முன்ஜாமின் மனு போடலாமா? வேண்டாமா? போட்டால் என்ன ரிஸ்க் என ரொம்ப தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சரி எதிர்கட்சி வட்டாரத்தில் இவ்வளவு பதற்றம் இருக்குதே.. இன்னொரு பக்கம் அரசு தரப்பில் குறிப்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் என்ன செய்து இருக்கிறார்கள் என விசாரித்தால் அங்கேதான் ஒரு மிகப்பெரிய மாஸ்டர் ஸ்கெட்ச் ரெடியாகிக் கொண்டு இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டில் நேருவின் மநு தள்ளுபடியான உடனேயே விஜிலன்ஸ் போலீசார் அவரை எந்த நேரத்திலும் தூக்குவதற்கு முழுமையாக தயாராகி விட்டார்கள். ஆனால் இப்போது அவர்களுக்குள் ஓடிக் கொண்டு இருக்கிற ஒரே ஒரு விவாதம் பலம் வாய்ந்த முன்னாள் அமைச்சரை தீபாவளிக்கு முன்பே அதிரடியாக கைது செய்யலாமா”?இல்லை தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு கைது செய்யலாமா? என்பதுதான். போலீசார் தரப்பில் எல்லா ஆவணங்களும் பக்காவாக ரெடியாக இருந்தாலும் செல்வாக்கு மிக்க ஒரு எதிர்கட்சி எம்எல்ஏ-வை கைது செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து ஒரு அரசியல் ரீதியாக கிரீன் சிக்னல் வேணும்.
ஏற்கனவே அன்பில் மகேஷுக்கு எப்படி ஒரு கிரீன் சிக்னல் கொடுத்தீங்களோ அதே மாதிரி விஜிலன்ஸ் போலீசார் இப்போது மேலிடத்தின் அதாவது முதலமைச்சரோட கிரீன் சிக்னலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் தரப்பில் இருந்து ஓகே என ஒரு சின்ன சிக்னல் கிடைத்தால் போதும் அடுத்த நிமிஷமே நடவடிக்கையில் இறங்கி டிவிஏசி அதிகாரிகள் பக்கா பிளானோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் சறுக்கலோடு நிற்கிற முன்னாள் அமைச்சர் நேரு இந்த சட்ட சிக்கலில் இருந்து எப்படி வெளிய வரப்போகிறார்? ஹைகோர்ட்டில் முன்ஜாமின் கிடைக்குமா? இல்லை முதலமைச்சரோட கிரீன் சிக்னல் கிடைத்து விஜிலென்ஸ் தங்களின் அதிரடியை காட்டுமா? வெயிட் பண்ணி பார்ப்போம்.
