Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Driving license

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து டிரைவிங் லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட போக்குவருத்து துறை சார்ந்த எந்த ஒரு ஆவணமும் காகிதம் மற்றும் அட்டை வடிவில் வழங்கப்படாது. இவை அனைத்துமே இனி டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் போக்குவருத்து துறை சார்ந்த அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவில் காண்பித்தால் போதும் என்ற நடைமுறையை மத்திய அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துவிட்டது. அதற்கு பின்பும் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் கார்டாக இந்த ஆவணங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் செப்டம்பர் 15க்கு பின்பு முற்றிலுமாக டிஜிட்டலில் மட்டுமே இவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ஆவணங்கள் கியூஆர் குறியீட்டுடன் சரிபார்ப்பு வசதியை கொண்டிருப்பதால் அதிகாரப்பூர்வ சோதனைகளை எளிதாக மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 91 வட்டார போக்குவருத்து அலுவலகங்களும் அவை சார்ந்த 56 யூனிட் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்கள் மூலமாகவே புதிய டிரைவிங் லைசன்ஸ் எனப்படும் ஓட்டுனர் உரிமம் வழங்குவது உரிமம் புதுப்பிப்பது ஆர்சி புக் எனப்படும் வாகன பதிவு சான்றுதல் வழங்குவது, வாகன பதிவுக்கான சான்றுதலில் பெயர் மாற்றுவது, வாகன பதிவு சான்று புதுப்பிப்பது, வாகன வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடக்கின்றன. இவற்றுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் வழங்கப்படும்.

அந்த நேரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் சென்று முதலில் எல்எல்ஆர் எனப்படும் ஓட்டுனர் பயிற்சி உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு பின்பு ஆறு மாதங்களுக்குள் மற்றொரு முறை இதே போன்று அப்பாயின்ட்மென்ட் பெற்று எழுத்து தேர்வு வாகனம் இயக்கி காண்பிப்பது போன்ற தேர்வுகளை எதிர்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

இதையும் படியுங்க  ₹10 பாட்டில் பஞ்சாயத்து… 2,000 பேருக்கு 'சஸ்பெண்ட்' வார்னிங்! டாஸ்மாக் ஊழியர்களுக்கு விழுந்த அதிரடி சாட்டையடி!

இதற்கு பதிவுச் சான்று கட்டணம் தவிர்த்து ஸ்மார்ட் கார்ட் வழங்கவும் தனியாக 250 கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் 200 ஓட்டுனர் உரிமம் அதாவது ஸ்மார்ட் கார்ட் வழங்கவும் 50 தபால் கட்டணமாகவும் பெறப்பட்டு வந்தது. அதே போன்று புதிய வாகன பதிவு சான்றுதல் பெறவும் அந்த வாகனத்தின் மதிப்புக்கேற்ப வாகன வரி செலுத்துவதுடன் என்ஜின் சேசிஸ் நம்பர்களை பதிவு செய்துவாகன பதிவு சான்றிதலும் வழங்கப்பட்டு வந்தது. அதற்கும் 250ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக காகித வடிவில் வாகன பதிவு சான்றும் ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தன. அவற்றை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு வாகன பரிசோதனையின் போது காண்பிக்க வேண்டிய நிலை இருந்தது.

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் நடைமுறை முதலில் சில பகுதிகளில் துவக்கப்பட்டது. அதன் பின்பு படிப்படியாக மாநிலம் முழுவதும் அத்திட்ட விரிவுபடுத்தப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து அனைத்து வட்டார போக்குவருத்து அலுவலகங்களிலும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஓட்டுனர் உரிமா மற்றும் ஆர்சி புக் எனப்படும் வாகன பதிவு சான்றிதலும் ஸ்மார்ட் கார்டாகவே வழங்கப்படுகிறது.

ஆனால் 10ாய டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக் விண்ணப்பங்கள் வந்த பின்பே அவை ஒன்றாக தயாரிக்கப்படும் என்பதால் இவை கிடைப்பதில் ஒரு வாரம் முதல் பல வாரங்கள் வரை தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறையின் படி ஓட்டுனர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் வட்டார போக்குவருத்து அளவு ஓட்டுனர் உரிமத்தை அங்கீகரித்தவுடன் அதை போக்குவருத்து துறை இணையதளத்திலிருந்தும் எம் பரிவாகன் செயலில் இருந்தும் அதே நாளிலேயே பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்க  உஷார்! தமிழகத்தில் ஒரே ஆண்டில் ₹1,800 கோடி காலி! உங்களை தேடி வரும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ - சைலேந்திர பாபு அவசர வார்னிங்”!

வட்டார போக்குவருத்து அலுவலகத்தில் விண்ணப்பத்தாரரால் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண்கள் வரும். அதை வைத்தே அவற்றை பதிவிரக்கம் செய்து கொள்ளலாம். போக்குவரத்து பொலீசார் மற்றும் காவல் துறையினர் ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சாண்டுதல்களின் ஒரிஜினல்களை காண்பிக்க சொல்ல மாட்டார்களா என சந்தேகம் எழலாம். ஆனால் கடந்த 2020 அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்தியாவில் மோட்டார் வாகன சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் படி வாகன தணிக்கை மேற்கொள்ளும்போது வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தங்கள் அசல் ஆவணங்களை காகித வடிவில் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை.

அவற்றை டிஜிட்டல் வடிவில் காண்பித்தால் போதுமானது என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது. கேரளம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும் என்பதுடன் ஆவணம் துளைந்தாலோ சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிரக்கம் செய்து அச்சிட்டு கொள்ள முடியும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்தும் வாகன பதிவு ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ள முதல்வர் விஜய் இந்த வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் அல்லது பயன்படுத்த தெரியாதவர்கள் இவற்றை பதிவிருக்கம் செய்வது எப்படி என்ற வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க  அருவியா… ஆறா? கரைபுரண்டு ஓடும் மணிமுத்தாறு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

போக்குவரத்து துறைக்கான சேவைகளை பெறுவதற்கான எல்லா விண்ணப்பங்களும் ஆன்லைன் முறையில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக புதிய வாகனம் வாங்குவோர் வாகனம் வாங்கும் டீலர் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கின்றனர். அவர்களே இதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதால் அதை பதிவிருக்கம் செய்து கார்டாக அச்சிட்டு கொடுக்க முடியும். அதேபோன்று ஓட்டுனர் உரிமம் பெற விரும்பும் பெரும்பாலானவர்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலமாக அல்லது தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது உதவியுடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கின்றனர். உரிமம் பெறுபவர் அல்லது வாகன உரிமையாளரின் தொடர்பு எண்ணுக்கு வரும் ஓடிபியை வைத்து பிறர் உதவியுடன் ஓட்டுனர் உரிமம் அல்லது வாகன பதிவு சான்றை பதிவிருக்கம் செய்து அச்சிட்டு கொள்ள முடியும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள மத்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்து துறையால் பராமரிக்கப்படும் எம் பரிவாகன் ஆப்பில் வாகன பதிவுச் சான்றை பதிவிருக்கம் செய்ய அதன் என்ஜின் நம்பர் மற்றும் சேசிஸ் நம்பர்களின் கடைசி நான்கு எண்களை கொடுத்தாலே போதுமானது. இந்த விபரங்களும் முதல்முறை மட்டுமே கேட்கப்படும். பின்பு எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல ஒவ்வொருடைய வாகனத்தை அதன் உரிமையாளர் அல்லாத மற்றொருவர் எடுத்துச் செல்லும்போது அவரது எண்ணுக்கு அந்த டிஜிட்டல் ஆவணங்களை ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு மாற்றிக்கொள்ளும் வசதி எம் பரிவாகன் ஆப்பில் உள்ளது.

அதன்படி ஒரு நாள் ஏழு நாட்கள் 15 நாட்கள் அல்லது ஆறு மாதங்கள் வரையிலும் மாதக்கணக்கிலும் ஓராண்டுக்கும்
கூட மாற்றிக் கொள்ளவும் அதில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய மாற்றம் பொதுமக்களுக்கு எளிதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago