https://republictn.com/

சமூக வலைதளங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்கள் அதிகரித்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதில் கடுஞ்சொற்களை பயன்படுத்தி யாரும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க வேண்டாம் என்றும், பிறரை புண்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவிக்க தேவையில்லை என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களது அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் உரிமை அந்தந்த கட்சிகளுக்கே உண்டு என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஒருவரையும் மனம் புண்படும்படி விமர்சிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளையும் அவர் விடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி வழியிலும் வந்தவர்கள் இதை மறக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லதை பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்ற திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டு வரும் கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கும் அவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதாக திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, இன்று காலை முதல் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். ராசா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி ஆகியோர் வெளியிட்ட கருத்துகளால், சமூக வலைதளங்களில் இரு தரப்பினரின் ஆதரவாளர்களிடையே பரஸ்பர விமர்சனங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவரது வேண்டுகோளில், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த அரசியல் நிலைப்பாடு எடுக்க உரிமை உள்ளதாகவும், ஆனால் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் கடுஞ்சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி வழியில், நல்லதை பாராட்டி, தவறுகளை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் உருவான வார்த்தைப் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago