https://republictn.com/

முதலமைச்சரின் ஆலோசகர்களாக இரு பேரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகராக விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே முதலமைச்சரின் அரசியல் சிறப்பு பணியாளராக ரதன் பண்டிட் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு அரசியல் வியூகம் வகுத்துக் கொடுத்த ஜான் ஆரோக்கியசாமி, தற்போது முதலமைச்சரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விஷ்ணு ரெட்டி சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago