Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக ஐடிவிங் மீட்டிங் செப்டம்பர் 12, 13 தேதிகளில் நடந்தது. சோசியல் மீடியா மூலமாக இடைத்தேர்தல் பிரச்சாரத்தை எப்படி செய்ய வேண்டும் என இந்த மீட்டிங்கில் ரொம்ப தீவிரமாக ஆலோசித்து இருக்கிறார்கள்.

தவெக ஆட்சியில் இருக்கிற விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, மின்வெட்டு சட்டம் ஒழுங்கு சீர்கேடு என எல்லா மேட்டரையும் சோசியல் மீடியாக்களில் நல்லா ஹைலைட் பண்ணி விஜயை லாக் பண்ணனும் என ஐடிவிங்கிற்கு ஆர்டர் பறந்திருக்கிறது. ஏற்கனவே ஐடிவிங்கில் இருப்பவர்கள் மட்டுமின்றி வீடியோ, ஷாட்ஸ் என தெறிக்க விடுகிற நல்ல ஆக்டிவாக இருக்கிற நபர்களை தற்காலிகமாக உடனே வேலைக்கு எடுங்கள். அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என ஆர்டர் பறந்திருக்கிறது. ஏன் இவ்வளவு ஸ்பீட் என்றால் இந்த தேர்தல் பிரச்சாரத்தை விட திமுக தலைமையை அப்செட் ஆக்கிய ஒரு விஷயம்தான் இதற்கு முக்கிய காரணமே.

Republic Tamil

சட்டமன்றத்தில முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மிசா கைது பற்றி விஜய் நக்கலாக பேசினார். அதைக் கண்டித்து செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கமாக சேர்கிற அந்த திமுக தொண்டர்கள் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருக்கிற மாதிரியான ஒருஃபீல் இருந்ததாக சொல்கிறார்கள். சமீபத்தில் அதிமுக நடத்திய அந்த போராட்டத்தில்கூட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு கூட இந்த கூட்டம் இல்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.

இதையும் படியுங்க  விஜயை பார்க்கவே முடியல..! அழுது புலம்பும் செங்கோட்டையன்.. அப்செட்டில் ர.ர-க்கள்..!

ஆனால் திமுக தரப்பில் இருந்து இந்த கூட்டம் சேர்வதைப் பற்றி எல்லாம் பெரிதாக தலைமை கவலைப்படவில்லை. அது கூட குறைச்சிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ”களத்தில் இறங்கி போராடுறதை விட சோசியல் மீடியாவில்தான் விஜயை அடிக்கணும். அதற்கான ஏற்பாடுகளை ரொம்ப தீவிரமா செய்யுங்கள்” என கூறியிருக்கிறது திமுக தலைமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago