தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட ஊழல் நடக்கவில்லை. ஒப்பந்தங்களில் கமிஷன் வாங்குகிற பழக்கமே கிடையாது என சட்டமன்றத்தில் அமைச்சர்கள் மைக்கை பிடித்து பயங்கர தத்துவம் எல்லாம் பேசினார்கள். ஆனால் முதலமைச்சர் விஜய் இங்கிலாந்துக்கு அந்த முதலீடுகளை ஈர்க்க லண்டன் பறந்த சமயம் பார்த்து இங்கே அமைச்சர்களின் வீடுகளுக்கு அதிகாரிகளும், காண்ட்ராக்டர்களும் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
குறிப்பாக ஒரு 10 நாளைக்கு முன் சீனியர் அமைச்சரின் வீட்டுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் ரகசிய விசிட் அடித்திருக்கிறார்கள். அந்த அதிகாரிகளோடு சேர்த்து தமிழ்நாடு முதல் டெல்லி வரை மத்திய அரசு, மாநில அரசுகளோட நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை செய்து வருகிற ஒரு மெகா கான்ட்ராக்ட் நிறுவனத்து ஆட்களும் அமைச்சரை போய் பார்த்திருக்கிறார்கள். அந்த அமைச்சரோட துறையில் இருக்கிற பெரிய பெரிய அரசு கான்ட்ராக்ட் பணிகளை அந்த கம்பெனிக்கு எடுத்து கொடுக்கிறதுதான் இந்த சந்திப்போட மெயின் பிளான். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த கான்ட்ராக்டர்களை அமைச்சருக்கு
அறிமுகப்படுத்தி வைத்து ”அண்ணே இவருக்கு அந்த வேலையை கொடுத்துருங்க” என சிபாரிசு செய்வதே யாரென்றால் நமது அரசாங்க பொறுப்பில் இருக்கிற பெரிய அதிகாரிகள்தான்.
எல்லா கணக்கு வழக்கையும் சீக்ரெட்டாக கேட்டுவிட்டு அந்த சீனியர் அமைச்சர் ”யோவ்.. வெளியில தெரியாம பாத்துக்கங்கயா. எந்த பிரச்சனையும் இல்லாம பாத்துக்கங்க. அவ்வளவுதான்” என சிரித்துவிட்டு கிரீன் சிக்னல் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். அந்த அதிகாரிகள் வெளியில் வந்து ”எங்கே முடியாதுன்னு சொல்லிருவாரோ அப்படின்னு பதட்டமா இருந்துச்சு. ஒரு வழியா ஒத்துக்கிட்டாருப்பா” என சிரித்துக் கொண்டே காரில் ஏறி கிளம்பி இருக்கிறார்கள்.
இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. தர்மபுரி பக்கத்தில் இருந்து வந்த ஒரு முன்னாள் அமைச்சரும் கூட அதே சீனியர் அமைச்சரை போய் பார்த்து பேச வேண்டிய முறையில் பேசி சில மெகா கான்ட்ராக்ட் பணிகளுக்கு இப்பவே அச்சாரத்தை போட்டுவிட்டு போயிருக்கிறார். முதல்வர் வெளிநாடு போனால் நமக்கு என்ன நாம கல்லா கட்ட வேண்டியதுதான் என அமைச்சர்கள் இப்போது ஜாலியாக இருக்கிறார்கள்
