Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gingee Case

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமாவதி காணாமல் போன விவகாரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய சிறுமி ஹேமாவதி, அடுத்த நாள் காலை முதல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். இரண்டு வாரங்கள் கடந்தும் சிறுமியைப் பற்றி எந்தவொரு துப்பும் கிடைக்காததால், இந்த வழக்கு லோக்கல் போலீசாரிடமிருந்து சிபிசிஐடி கைக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

ஜாதகத்தை கேட்டு வாங்கிய சிபிசிஐடி
வழக்கமாக வழக்கு ஆவணங்களையும் சாட்சி வாக்குமூலங்களையும் மட்டுமே பெறும் சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கு விசாரணையில் சிறுமி ஹேமாவதியின் ஜாதகத்தை பெற்றோர் தரப்பில் இருந்து கேட்டு வாங்கியுள்ளனர். ஒரு காணாமல் போன வழக்கு விசாரணையில் ஜாதகத்தைக் கோரியது பல திடுக்கிடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சமீபகாலமாக நவீன தொழில்நுட்பங்களான செல்போன் டவர் லொகேஷன், சிசிடிவி கேமராக்கள் மூலம் தேடியும் சிறுமியைப் பற்றிய எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அதேபோல, குழந்தை காணாமல் போன பிறகும் பெற்றோரிடம் பெரிய அளவில் சலனம் ஏதும் இல்லாதது காவல்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  ஜிஎஸ்டி-யில் எகிறிய இந்தியா… சறுக்கிய தமிழ்நாடு! ‘உற்பத்தி மாநிலத்திற்கு’ விழுந்த ஆப்பா?
Gingee Case

மாந்திரீகம்- ‘நரபலி’ கோணம்

காவல்துறையினரின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேரளாவில் மாந்திரீகம் பயின்று வரும் சாமியார்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்ய நரபலி கொடுப்பதற்காகச் சுத்தமான ஜாதகம் கொண்ட பெண் குழந்தைகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. காணாமல் போன சிறுமி ஹேமாவதி கடக ராசி, பூச நட்சத்திரம் கொண்டவர். ஜோதிட ரீதியாக இது மிகச் சுத்தமான ஜாதகமாகக் கணிப்பதாகக் கூறப்படுகிறது.

அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தங்கள் பதவியைத் தக்கவைக்கவும் ஆதாயத்திற்காகவும் யாகங்கள் செய்யும்போது கும்பம், சிம்மம், ரிஷபம், தனுசு போன்ற ராசிகளைச் சேர்ந்த தோஷமில்லாத மூத்த ஆண் குழந்தைகளை நரபலி கொடுக்கும் கொடூர வழக்கமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஊர் ஊராகச் சென்று குறி சொல்பவர்கள் மூலம் சுத்தமான ஜாதகம் கொண்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் பெரிய தொகையைக் கொடுத்து பெற்றோர் சம்மதத்துடன் வாங்கப்படுவதோ அல்லது கடத்தப்படுவதோ நடப்பதாக கூறப்படுகிறது.

கோயில்களில் ரகசிய கண்காணிப்பு உத்தரவு
கருப்புசாமி, காளியம்மன், வாராகி போன்ற தெய்வங்களின் பெயரில் சில மாந்திரீகக் குழுக்கள் இயங்கி வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், தமிழ்நாட்டில் உள்ள காடுகள், சுடுகாடுகள் மற்றும் மலை அடிவாரங்களில் அமைந்துள்ள காளியம்மன், கருப்புசாமி, வாராகி கோயில்களைத் தீவிரமாகக் கண்காணிக்க அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  கோவை சிறுமி கொலை அதிர்ச்சி – குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை என முதலமைச்சர் விஜய் உறுதி

ஆட்கொணர்வு மனுவுக்கு மறுப்பு தெரிவிக்கும் தாய்
இந்த விசாரணையில் நரபலி கோணத்தை போலீசார் தீவிரமாகச் சந்தேகிக்க மற்றொரு முக்கியக் காரணமும் அமைந்துள்ளது. திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தமிழ் செல்வன் என்பவர் சிறுமியின் தாயாரைச் சந்தித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஆட்கொணர்வு மனு’ தாக்கல் செய்தால் உயர்நீதிமன்றமே நேரடிக் கண்காணிப்பில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தும் எனக்கூறி மனுவில் கையெழுத்திடக் கேட்டுள்ளார். ஆனால், சிறுமியின் தாயாரோ “போலீஸ் தான் தேடுகிறார்களே, அப்புறம் எதுக்கு கோர்ட்டுக்கு போகணும்?” என்று கூறி கையெழுத்திட அடியோடு மறுத்துள்ளார்.

Gingee Girl Hemalatha

பெற்ற தாயே நீதிமன்றத்தை நாட மறுப்பதால், சிறுமி காணாமல் போனதன் பின்னணி பெற்றோருக்கு முன்கூட்டியே தெரியுமா அல்லது பணத்திற்காக பெற்றோர் சம்மதத்துடனேயே ஏதேனும் அசம்பாவிதம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

பெரியார் மண், முற்போக்கு மாநிலம் என்றெல்லாம் பேசப்பட்டாலும், சமீபகாலமாக மாந்திரீகர்கள் மூலம் யாகங்கள் வளர்ப்பது, பழிவாங்கும் பூஜைகள் மற்றும் நரபலி போன்ற மூடநம்பிக்கைக் கொடூரங்கள் அதிகரிப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  "என் புள்ளைய 20 பேர் அடிச்சது கோஷ்டி சண்டையா?.." - அமைச்சரின் பேச்சால் கதறிய தாய்!

ஏழு வயது சிறுமி ஹேமாவதி எந்தவொரு ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. சிபிசிஐடி விசாரணையின் முடிவிலேயே அடுத்தடுத்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 hours ago at 5 hours ago