Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tamilisai

சட்டமன்றத்தில் திமுகவின் கடந்தகால ஊழல்களைப் பட்டியலிட்டு, முதலமைச்சர் விஜய் திமுகவை நிலைகுலையச் செய்துள்ளதாக தமிழிசை பாராட்டியுள்ளார்.

முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து, ”திராவிட முன்னேற்ற கழகத்தை ஊழலை சொல்லி ஓட ஓட ஓட முதலமைச்சர் மிரட்டி இருக்கிறார். வெளிநடப்பு கூட செய்ய முடியாமல் திராவிட முன்னேற்ற கழகம் தர்ணா செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். வெளிநடப்பு செய்தால் யாரும் ஓடினார்கள் என வந்துவிடும் இல்லையா? சட்டமன்றத்தை நேரடியாக பார்க்கின்ற பழக்கம் உள்ளவள் நான்.

என்றைக்கு தவெக ஆட்சிக்கு வந்ததோ அன்றிலிருந்து நேரடியாக ஒளிபரப்புகிறார்கள் பாராட்டுகள். ஏனென்றால் 10
ஆண்டுகளுக்கு முன்னாலேயே நான் என்னுடைய டிவிட்டரில் கூட போட்டிருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்னாலேயே நேரடியாக சட்டமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்ப வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆக அதே மாதிரி இன்னைக்கு ஒளிபரப்பப்பட்டது.

Vijay

ஆனால் ஒன்று இன்னைக்கு யார் ஓடினார்கள் என்பதை தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொண்டேன். நான் நேரடியாக பார்க்கவில்லை. திராவிட முன்னேற்ற கழகத்தை ஊழலை சொல்லி ஓட ஓட ஓட முதலமைச்சர் மிரட்டி இருக்கிறார். ஆக ஊழல் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது என்ற வகையில் வாழ்த்துகள். அதேபோல ஊழல் வருங்காலத்தில் அரசியலில் இருக்கக்கூடாது என்பதும் நமது கோரிக்கை. வீராணத்தில் ஆரம்பிச்சு சர்க்காரியா கமிஷன் சொன்ன மாதிரி விஞ்ஞான ஊழல் செய்து முன்னுக்கு வந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள்.

இதையும் படியுங்க  ஆடு திருடனுக்கு அரசு வழக்கறிஞர் பதவியா..? ₹120 கோடி முதல் மெகா ஊழல்..? வெளுத்தது தவெக அரசின் சாயம்..!

அதனால ஏதோ எதுவுமே செய்யாத மாதிரி கதை சொல்லுவீங்க. எங்கே எவிடன்ஸ், ஆதாரம் ஆதாரம் என கேட்பார்கள். ஆதாரப் பூர்வமாக ஊழலை வெளிப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர். இது வருங்கால சந்ததியினருக்கு எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் ஊழல் செய்யக்கூடாது, மக்களின் பணத்தை சுருட்ட கூடாது. அப்படி சுருட்டினால் ஏதாவது ஒரு காலத்தில் அது வெளிக்கொணரப்படும் என்ற ஒரு பாடம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

அதனால் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். எனக்கு நிச்சயமாக தவெகவோடு மாற்று கருத்து இருக்கிறது. கொள்கை முரண்பாடும் இருக்கிறது. சட்டம் ஒழுங்கை அவர்கள் சரியாக நிர்வகித்திருக்க வேண்டும் என்ற எனது கோரிக்கை இருக்கிறது. இன்னைக்கு காவல்துறை மானிய கோரிக்கை நடந்து கொண்டிருக்கும் பொழுதே தலைநகரில தவெகவை சார்ந்தவரே ஒருவர் வெட்டி கொல்லப்படுகிறார்.

ஆக இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் இதை சரியாக கவனிக்க வேண்டும். அதை சொல்லுகின்ற அதே நேரத்தில ஊழல் யார் செய்தாலும் அது வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை உறுதியாக இருக்கிறார். அதனால்தான் உடனே பேச வேண்டும் என நினைத்தேன். வெளிநடப்பு கூட செய்ய முடியாமல் திராவிட முன்னேற்ற கழகம் தர்ணா செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். வெளிநடப்பு செய்து விட்டால் யாரு ஓடுனா என வந்துவிடும் இல்லையா? அதுக்காக உள்ளே இருந்து தர்ணா செய்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். எது எப்படி இருந்தாலும் ஊழல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

இதையும் படியுங்க  கைதாகும் உதயநிதி..! விஜய்யின் மாஸ்டர் பிளான்..! திமுக-வின் ஸ்லீப்பர் செல் அருண் ஐபிஎஸ் யூடர்ன்..!?

ஆனால் ஒரே ஒரு சங்கடம் என்னவென்றால் ஊழலில் திளைத்த காங்கிரஸைக் கூட வைத்துக்கொண்டு ஊழலை பற்றி பேசுவது என்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் ஊழலுக்கு பெயர் போய், ஒவ்வொரு மாநிலத்தாலும் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் இன்று தவெகவோடு இருக்கிறது. அது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago