Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Amalraj’

சென்னையில் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் குற்றங்களால் பொதுமக்கள் ரூ.370 கோடிக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் நடைபெற்ற சைபர் கிளப் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு கிளப் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்த அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், ஆன்லைன் மூலம் எளிதாக கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்ற பேராசையாலும் பொதுமக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பையே ஓரிரு நாட்களில் சைபர் மோசடியாளர்களிடம் இழந்துவிடுவதாக காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பேராசையின் காரணமாகவோ அல்லது ஏமாற்றப்படுவதன் மூலமாகவோ பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் இழந்துவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நம்முடைய சென்னை மாநகரில் மட்டும் ரூ.370 கோடி அளவிற்கு சைபர் மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள். பேராசையின் காரணமாகவோ அல்லது ஏமாற்றப்படுவதன் மூலமாகவோ மொத்த பணத்தையும் இழந்துவிடுவதை பார்க்க முடிகிறது” என்று அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அல்லது விசாரணை முகமைகள் என்ற பெயரில் ஆன்லைன் மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை என்றும், இதுபோன்ற மோசடிகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க  "கடலையும் பார்க்கலாம்… மேகத்தையும் தொடலாம்! வான்வழியாக மெரினாவை ரசிக்க ரெடியாகுங்க மக்களே!

சட்டவிரோத பார்சல்கள் வந்துள்ளதாகக் கூறி, சிபிஐ அல்லது போலீஸ் அதிகாரிகள் போல் மிரட்டி பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ முறையில்தான் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆன்லைன் கேம்கள் மூலமாகவும், எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையாலும் சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. குறிப்பாக, வீட்டில் இருந்தபடியே பகுதிநேர வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று வரும் மோசடி லிங்குகளை பொதுமக்கள் நம்பி ஏமாறுவதாகவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் இணைந்து கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி 10 முக்கிய சைபர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்த மெகா சைபர் மோசடிகளுக்குப் பின்னால் இருந்த நெட்வொர்க்கை உடைப்பதற்காக, சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படை போலீசார் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் வாரக்கணக்கில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற இந்தத் தேடுதல் வேட்டையின் முடிவில் இதுவரை 10 முக்கிய சைபர் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 10 பேரும் வெறும் 6 வழக்குகளில் மட்டுமே பொதுமக்களிடமிருந்து ரூ.24.54 கோடி பணத்தை மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 6 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ரூ.4.4 கோடி பணம் மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பேர் இடைத்தரகர்களாக செயல்பட்டு, மோசடி செய்யப்பட்ட பணத்தில் கமிஷன் பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்க  கானா பாட்டு பாடி நண்பர் வீட்டில் தங்கிய 2 இளைஞர்கள்..! துடிக்கத் துடிக்க சம்பவம் செய்த ஹெல்மெட் கும்பல்..!

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 மொபைல் போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள் மற்றும் வங்கிப் பாஸ்புக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சாதனங்கள் மூலம் சைபர் மோசடி தொடர்பான மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் மோசடியில் பணத்தை இழந்தால், முதல் 24 மணி நேரம் ‘கோல்டன் ஹவர்ஸ்’ எனப்படும் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். எனவே, பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்தவுடன் தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். மேலும், தேசிய சைபர் குற்றப் பதிவு போர்ட்டல் (National Cyber Crime Reporting Portal) மூலமாகவும் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பண மோசடி நடைபெற்ற உடனேயே புகார் அளிக்கப்பட்டால், மோசடியாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி, பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்படுவதைத் தடுக்கவும், முடிந்தவரை பணத்தை மீட்டெடுக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், சைபர் மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.

சென்னையில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை ரூ.370 கோடி அளவிற்கு பொதுமக்கள் சைபர் குற்றங்களில் பணத்தை இழந்துள்ள நிலையில், சைபர் மோசடிகளைத் தடுப்பதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்க  சென்னையில் சினிமா மிஞ்சிய பயங்கரம்.. திமுக அலுவலகத்திற்குள் ஓடி கதறிய விசிக பிரமுகர்.. நடந்தது என்ன?

குறிப்பாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆன்லைன் கேம்கள், போலியான வேலைவாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்புகள், எளிதாக பணம் சம்பாதிக்கும் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் புதிய முறைகளில் மோசடிகளை அரங்கேற்றி வரும் நிலையில், பொதுமக்கள் அறிமுகமில்லாத லிங்குகளை கிளிக் செய்வதையும், தெரியாத நபர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி உள்ளிட்ட முக்கிய தகவல்களை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், காவல்துறை, சிபிஐ அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்பின் பெயரில் தொலைபேசி அல்லது இணையம் வழியாக மிரட்டி பணம் கேட்கப்பட்டால், அது மோசடியாக இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் சைபர் குற்றங்களால் ரூ.370 கோடிக்கும் அதிகமான பணம் இழக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ள நிலையில், ஒருபுறம் சைபர் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, மோசடியில் பணத்தை இழந்த பிறகு உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்வது, பணத்தை மீட்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 hours ago at 8 hours ago