https://republictn.com/

பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டையில் (ID Card) சாதிப் பெயர் இடம்பெறாது என்றும், இந்த விவகாரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் ஆறுமுகம் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழக அரசில் வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக முகவரி, இரத்த வகை, ஆதார் எண் மற்றும் சாதிச் சான்றிதழ் தொடர்பான விவரங்கள் அடங்கிய தரவு அடிப்படையிலான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் ராஜ்மோகன் ஆறுமுகம் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயர் நேரடியாக அச்சிடப்படாது. ஐடி கார்டில் சாதி தேவையில்லை” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் திட்டம் மற்றும் அமைச்சரின் முந்தைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், அடையாள அட்டையில் மாணவர்களின் அவசரத் தேவைகளுக்கான முகவரி, இரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் மட்டுமே இடம்பெறும் என்றும் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனும் தனது முந்தைய பேச்சுக்கு விளக்கம் அளித்து, மாணவர்களின் அடையாள அட்டைகளில் சாதி விவரங்கள் அச்சிடப்படாது என்றும், கல்வி மற்றும் அவசரத் தேவைகளுக்கான அடிப்படைத் தகவல்கள் மட்டுமே இடம்பெறும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் மூலம், மாணவர்களிடையே சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அடையாள அட்டைகள் வழங்கப்படாது என்பதை தமிழக வெற்றிக் கழக அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago