Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய பா.ஜ.க தலைவருமான கிரண் குமார் ரெட்டியை தமிழ்நாடு ஆளுநராக நியமிப்பதற்கான தீவிர முயற்சிகள் டெல்லி மட்டத்தில் நடைபெற்று வருவதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்த ஆளுநர் மாற்றப் பின்னணியில் சாட்சாத் விஷ்ணு ரெட்டிதான் முக்கியச் சூத்திரதாரியாகச் செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது.

கிரண் குமார் ரெட்டியும், விஜயின் ஆலோசகருமான விஷ்ணு ரெட்டியும் தூரத்து உறவினர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த உறவைப் பயன்படுத்தி, தமிழக அரசியலில் தனக்கான செல்வாக்கை நிலைநிறுத்த விஷ்ணு ரெட்டி ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளார்.

Republic Tamil

கிரண் குமார் ரெட்டி ஆளுநராகப் பொறுப்பேற்றால், தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் முதல்வர் விஜய் மற்றும் த.வெ.க-விற்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே ஒரு வலுவான பாலமாகச் செயல்பட முடியும் என்பது விஷ்ணு ரெட்டியின் கணக்கு. த.வெ.க-வின் வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, வருங்காலத்தில் அமையக்கூடிய த.வெ.க ஆட்சியில் தன்னுடைய இடத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளலாம் என்று விஷ்ணு ரெட்டி திட்டமிடுகிறார்.

இதையும் படியுங்க  விஜயகாந்த் பிறந்தநாளில் கேப்டன் நினைவலைகளில் மூழ்கிய CM விஜய்.. இணையத்தைக் கலக்கும் முதலமைச்சரின் அதிரடி போஸ்ட்!

இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உதவியை விஷ்ணு ரெட்டி நாடியுள்ளார். நாயுடுவின் மூலம் மத்திய பா.ஜ.க தலைமைக்கு இந்தக் கோரிக்கை அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் கடைசி ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி, தற்போது பா.ஜ.க-வில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவரும் தனக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளாராம்.

Republic Tamil

ஹைதராபாத் அரசியல் வட்டாரங்களில் இருந்து மத்திய பா.ஜ.க தலைமுறைக்கு அனுப்பப்பட்டுள்ள வலுவான பரிந்துரைகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் த.வெ.க, காங்கிரஸ் அல்லது அதனுடன் தொடர்புடைய கூட்டணிகளுக்குச் செல்லாமல் தடுக்கும் வேலையைக் கிரண் குமார் ரெட்டி கவனித்துக்கொள்வார்.

தேசிய அளவில் த.வெ.க-வை பா.ஜ.க-வின் ஆதரவு நிலைக்குக் கொண்டுவரும் நுட்பமான பணியை விஷ்ணு ரெட்டி முன்னெடுப்பார். இந்த இருமுனை வியூகமும் பா.ஜ.க தலைமையை வெகுவாகக் கவர்ந்துள்ளதால், விஷ்ணு ரெட்டியின் இந்த ஆளுநர் நியமனக் கோரிக்கை டெல்லியால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படியுங்க  புதுசு கண்ணா புதுசு… அனுபவமில்லாத த.வெ.க. அமைச்சர்கள்..! 'பேக் டேட்' ஆர்டரில் கல்லா கட்டும் தி.மு.க. மாஜிக்கள்..!

தமிழக அரசியலில் இந்த நகர்வு நிஜமானால், ஆளுநர் மாளிகைக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்குமான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதுடன், வரவிருக்கும் தேர்தல்களில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களுக்கும் இது வித்திடும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago