Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அரசாங்கத்தில் நமக்கு இருக்கும் முக்கியத்துவம் கட்சியில் இல்லையே என்ற பெரும் ஆதங்கம் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏற்பட்டிருப்பதாக தவெக வட்டாரங்களில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

கட்சி தொடங்கிய பின்னர் உள்ளே வந்தவர்தான் ஆதவ் அர்ஜுனா. ஆனால் தேர்தல் முடிந்ததும் யாரும் எதிர்பாராத வகையில் ஆட்சியின் அதிகார மையத்தில் முக்கிய அமைச்சராக உயர்ந்தார். அரசாங்கத்தில் செல்வாக்கு கிடைத்தது அதிகாரம் கிடைத்தது. தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை பெற்று தரும் அளவுக்கு பிடியும் கிடைத்தது. ஆனால் கட்சிக்குள் அங்கே இன்னும் 30 ஆண்டுகளாக விஜயுடன் பயணித்த ரசிகர்மன்ற நிர்வாகிகள், விஜயின் மக்கள் இயக்கத்தில் உழைத்தவர்கள், புஸ்ஸி ஆனந்தின் நீண்ட கால ஆதரவாளர்கள் என ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு வேரூன்றி நிற்கிறது.

அந்த கட்டமைப்பை தாண்டாமல் கட்சியின் முழு அதிகாரத்தையும் கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த ஆதவ் அர்ஜுனா இப்போது தனது அடுத்த கட்ட அரசியல் ஆட்டத்தை தொடங்கி விட்டதாக கட்சிக்குள் இருந்து பகீர் தகவல்கள் கசிகின்றன. புஸ்ஸி ஆனந்துக்கு மாவட்ட செயலாளர் முதல் கிளைச் செயலாளர் வரை மிகப்பெரிய ஆதரவு வட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த கோட்டையை
ஒரே நாளில் உடைக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு செங்கல்லாக பிரித்தெடுக்க முடியும். அதற்கான ஆட்டம்தான் இப்போது மாவட்டங்கள் தோறும் அரங்கேறிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதையும் படியுங்க  Breaking: 'CM விஜய் வெற்றி பெற்றது செல்லாது' - இடியாய் இறங்கிய செய்தி..! திமுக வேட்பாளரால் பெரும் பரபரப்பு..!

“மதியம் கறி சாப்பிடலாம்!” – விளம்பர ஆசையில் மொத்த பல்லையும் இழந்த முதியவர்! வாயில் ரத்தக்களறியோடு நேர்ந்த கொடூரம்!

மாற்று கட்சிகளில் இருக்கும் செல்வாக்கு மிக்க நிர்வாகிகளை தவெகவுக்குள் கொண்டு வருவது. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மாவட்ட அளவில் புதிய அதிகார மையங்களை உருவாக்குவது. பழைய நிர்வாகிகளின் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பது. இப்படியாக கட்சிக்குள் தனக்கென ஒரு புதிய படையை உருவாக்கும் வேளையில் ஆதவ் அர்ஜுனா தீவிரமாக இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆன்ந்த் அணிகளுக்கு இடையிலான அதிகார போர் உச்சத்தை தொட்டதாக சொல்லப்படுகிறது.

அமைச்சர் பதவிக்கான பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நேரத்திலேயே, புஸ்ஸி ஆனந்த் தரப்பு எம்எல்ஏக்களுக்கு எதிரான பழைய வீடியோக்களும், ஆடியோக்களும் திடீரன சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியதாகவும் அவற்றின் பின்னணியில் திட்டமிட்ட அரசியல் சதி இருப்பதாகவும் கட்சிக்குள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புஸ்ஸி ஆனந்த் அணியில் இருப்பவர்களுக்கு சிறிய அளவிலான அமைச்சர் பதவிகள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும் அதிகாரமிக்க முக்கிய துறைகள் ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவு வட்டாரத்திற்குள் சென்றுவிட்டதாகவும் கட்சியின் ஒரு தரப்பு கொந்தளிக்கிறது.

இதையும் படியுங்க  "சோதனைகளை வென்று சாதனை படைங்க! - இளைஞர்களுக்கு CM விஜய் போட்ட வைரல் பதிவு!"

எனக்கு இந்தப் பதவியே வேண்டாம்.. விஜய் எடுத்த விபரீத முடிவு… இதுக்கா சார் உங்களுக்கு ஓட்டுப்போட்டாங்க..! கெஞ்சும் அதிகாரிகள்..!

ஆனால் ஆட்டம் இத்துடன் முடிந்து விடவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தற்போது அமைச்சர் அவையில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் ஆதரவு அமைச்சர்களின் பதவிகளையும் காலி செய்து அந்த இடங்களில் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாக அமர்த்த ஆதவ் அர்ஜுனா புதிய வியூகம் வைத்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்காக புசி அணியை சேர்ந்த அமைச்சர்களுக்கு எதிரான வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் சரியான நேரத்தில் அவற்றை வெளியிட்டு அரசியல் அழுத்தத்த உருவாக்கி அமைச்சர் பதவிகளை பறித்துவிட்டு அந்த இடங்களில் தனது ஆதரவாளர்களை அமர்த்துவதே திட்டம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த முழு ஆட்டத்தையும் ஆதவ் அர்ஜுனாவின் ஆலோசனைப்படி அவரது ஆதரவு ஐடி குழு முன்னெடுத்து வருவதாகவும், கட்சிக்கு உள்ளிருந்து குற்றச்சாட்டுகள் வெடிக்கின்றன. ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் கணக்கு இத்துடன் நிற்கவில்லை என்கிறது கட்சிக்கு உள்ளிருந்து வரும் அதிர்ச்சி தகவல்.

இதையும் படியுங்க  "புது முதலீடு வெறும் 23% தான்... மீதி 75% திமுக உழைப்பு!" – விஜய் அரசைப் புள்ளிவிவரத்தோடு பொளந்து கட்டிய டி.ஆர்.பி. ராஜா!

திமுகவுக்கு தில் இருக்கா..? மு.க.ஸ்டாலினுக்கு துரை வைகோ சவால்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

முதலில் கட்சிக்குள் தனக்கென ஒரு வலுவான ஆதரவு படையை உருவாக்குவது. அடுத்து பழைய நிர்வாகிகளின் பிடியை தளர்த்துவது. பின்னர் அமைச்சரவையில் தனது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது. கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் அந்த பிளவை தனது பலமாக மாற்றுவது. இறுதியில் துணை முதல்வர் பதவி அதற்குப் பிறகு முதல்வர் நாற்காலி. இதுதான் ஆதவ் அர்ஜுனாவின் நீண்ட கால அரசியல் கணக்கு என்று அவரது எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago