Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

fire accident

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மகளிர் மருத்துவப் பிரிவில், குழந்தைகளுக்கான பராமரிப்பு அறையில் 16 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தன.

அப்போது மருத்துவமனையின் பராமரிப்பு அறையில் இருந்த ஏசி இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தீ அனைத்து இடங்களில் மளமளவென பரவி அறை முழுவதும் புகை சூழ்ந்தது. இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தைகள் இருந்த அறை மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்ததால், மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 குழந்தைகள் உடல் கருகியும், மூச்சு திணறியும் உயிரிழந்தது. ஒரு பச்சிளம் குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையும் படியுங்க  நள்ளிரவில் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரழைத்த ஹரினி.. துடித்த கணவர்.. அலறிய குழந்தை.. நடந்தது என்ன?
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago