Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்து வந்தாலும் வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் துறை இருந்து வருகிறது. இது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் செயல்படுகிறது. அதாவது தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 4765 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வந்தது. இதனையடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்டாக் கடைகளின் எண்ணிக்கை 4765லிருந்து 4048 ஆக குறைந்துள்ளது.

அப்படி இருந்த போதிலும் தினமும் 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் வருமானங்கள் இரட்டிப்பாகும். பண்டிகை காலங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறையே இல்லை. எனவே ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளூர் தினம், குடியரசு தின விழா, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மிலாது நபி, காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  நொடிப்பொழுதில் எடுத்த முடிவு… கல்லூரி மாணவியின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் - நடத்துநர்!

அந்த வகையில் நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்டாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை புதன்கிழமை மிலாது நபியை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் உள்ளிட்ட அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள். FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் நாளை கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் விதிகளின்படி கடுமையான எடுக்கப்படும் என நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் மதுப்பிரியிர்கள் மது பாட்டில்களை முன்கூட்டியே வாங்கி வைத்துள்ளனர்.

இதையும் படியுங்க  How Artificial Intelligence is Transforming Cybersecurity in 2026
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago