Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி, 6 மாதங்களில் தேர்தல் வழக்கை முடிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

கடந்த முறையே வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என கூறியிருந்தேன் என்றார். அதேபோல, ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படியுங்க  “நீ மாஸ்னா நான் பக்கா மாஸ்...”... நாளை மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விஜய்... சட்டப்பேரவையில் சரவெடி...! 

இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் மனுத்தாக்கல் செய்யுங்கள். அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago