Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியிருக்கிறது சிஎம்ஆர்எல் நிறுவனம்.

சென்னையில் மூன்று மெட்ரோ சேவைகளைக் கொண்டு வருவது தொடர்பாக, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் தரப்பில் கடந்த ஆண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அதற்கான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தத் திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க முடிவு செய்து, ஒப்பந்தப் புள்ளியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, வாட்டர் மெட்ரோ திட்டம் அமைப்பது தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு துறைகளின் ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், தற்போது அதற்கான டெண்டரை வெளியிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆவடியிலிருந்து நேப்பியர் பாலம் வழியாக மாமல்லபுரம் வரை சுமார் 53 கிலோமீட்டருக்கு பக்கிங்காம் கால்வாயில் படகுப் போக்குவரத்து, அதாவது வாட்டர் மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது.

முதற்கட்டமாக முத்துக்காட்டிலிருந்து நேப்பியர் பாலம் வரைக்கும் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு வாட்டர் மெட்ரோ திட்டம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தற்போது ஆவடியிலிருந்து மாமல்லபுரம் வரை முழுமையாக 53 கிலோமீட்டருக்கு அந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வருவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  டீ குடித்த கேப்பில் ‘எஸ்கேப்’… கர்நாடகா வரை பறக்கும் தனிப்படை! திணறும் போலீஸ் பட்டாளம்!

ஏற்கனவே கேரள மாநிலம் கொச்சியில் வாட்டர் மெட்ரோ சேவை, மத்திய அரசு நிதிப் பங்களிப்புடன் அந்த மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, கொச்சியைப் போல சென்னையிலும் இந்த வாட்டர் மெட்ரோ சேவையைக் கொண்டு வருவதற்காகவும், அதற்கான சாதக, பாதகங்களை ஆராய்ந்து திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காகவும் தற்போது இந்த ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டிருக்கிறது.

சென்னையைப் பொறுத்தமட்டில், 1877-ஆம் ஆண்டு பக்கிங்காம் கால்வாயில் கடல் மட்டத்திற்குக் கீழே இரண்டு அடியில் ஆங்கிலேயர்கள் தோல் சுத்தம் அமைத்து, படகு சேவையும் அதற்கான கட்டணத்தையும் வசூலித்து வந்தனர்.

காலப்போக்கில் நகரமயமாக்கல் காரணமாக பக்கிங்காம் கால்வாய் வந்து சாக்கடை கழிவுகள் சேர்க்கக்கூடிய இடமாக மாறிப்போயிருக்கிறது. பெருமழை, பெருவெள்ளத்தில் வெள்ளநீர் கடலில் கலக்கக்கூடிய ஒரு முக்கியமான கால்வாயாக இந்தக் கால்வாய் இருக்கிறது.

சாக்கடை கழிவுகள் சேர்வதால் கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் வரைக்கும் மணல் கசடுகளாக பக்கிங்காம் கால்வாய் மாறியிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் மணல் கசடுகளை முழுமையாக அகற்றி, சாக்கடைக் கழிவுகளை வெளியேற்றி, கால்வாயை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் குழாய்களை அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கும், மழைக்காலங்களில் கால்வாயில் வெள்ளநீரை முழுமையாகக் கடலில் கலக்கக்கூடிய வகையிலும், மற்ற நேரங்களில் தேக்கி வைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கும் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்க  ஷெட்டில் நின்ற கார்... உள்ளே வீசிய துர்நாற்றம்: மதுரையை உலுக்கிய மர்ம மரணம்!

குறிப்பாக, பக்கிங்காம் கால்வாயை ஒட்டி இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆங்கிலேயர் காலத்தில் இருந்ததைப் போல படகு நிலையங்கள், பணிமனை அமைக்கக்கூடிய பணிகள் மற்றும் படகு நிலையங்களை ஒட்டி பூங்காக்கள், அமரும் இடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது தொடர்பாகத்தான் தற்போது அந்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, இதே வழித்தடத்தில் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவையும் செயல்பட்டு வருவதால், அந்த வழித்தடத்திற்கு கீழே பக்கிங்காம் கால்வாயில் இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டிருக்கிறது.

விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசு நிதிப் பங்களிப்புடன் கொச்சியைப் போல சென்னையிலும் இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 hours ago at 18 hours ago