Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலைகளின் இளவரசியான ஏலகிரி மலை, இயற்கை அழகை நேசிக்கும் சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. இங்கு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் குறிப்பாகக் கோடைக்காலங்களில் குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் இந்த இடத்தில் உள்ள படகு சவாரி, இயற்கை பூங்கா, வியூ பாயிண்ட் போன்ற இடங்களில் சூழ்ந்து கொள்வார்கள். இப்படி தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏலகிரி மலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். 2026 இந்தாண்டு இரண்டு மாதம் தள்ளி ஜூலை 18 , 19 நடைப்பெற்று முடிந்தது

மாவட்ட நிர்வாகம் சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் சில நிகழ்ச்சிகளை தவிர முக்கால் வாசி நிகழ்ச்சி நடைப்பெறவே இல்லை

கண்காட்சி என்ற பெயரில் நடந்த சர்ச்சைகள்;- விழா தொடங்கி சிறிது நேரத்தில் மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு மலையில் மலைவாழ் மக்கள் அல்லாதவர்களுக்கு நிலத்தை விற்க்கவோ பட்டா வழங்கவோ கூடாதுன்னு சட்டம் இருக்கிறது அதைமீறி நீங்கள் எப்படி பட்டா பதிவு செய்கிறீர்கள் என கலெக்டரை பார்த்து கேட்டார் அப்போது அவரை படம் எடுக்க முயற்சித்த சில நிருபர்களை ஏதோ சொல்ல இருண்டு தரப்புக்கும் இடையே தகராறு முற்றி கைகலப்பில் முடிந்து , கடைசியாக அந்த மலையாளி மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்

இதையும் படியுங்க  "ரசிகன் உயிருக்கு ₹3 லட்சம் இன்சூரன்ஸ்!" - திரையுலகை அதிரவைத்த அல்லு அர்ஜுனின் மாஸ் அதிரடி!

நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் திருப்பதி, கேசி.வீரமணி, விஸ்வநாதன், சையத் பாரூக் பாஷா, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்

அப்போது மேடையில் பேச வந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.வீரமணி, கடந்த திமுக ஆட்சியில் ஆட்சி முடியும்போது, ஏதோ கடமைக்காக ஒரு நாள் மட்டு அவசரகதியில் கோடை விழா நடத்தினார்கள்.

நான் சேர்மனாக இருந்தபோது முதல்முறையாக கோடைவிழா நடைபெற்றது அம்மா ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டு அமைச்சராக இருந்த போது ஆண்டு தோறும் கோடை விழா இரண்டு நாட்கள் நடக்கும். விழாவில் சினிமா நட்சத்திரங்களை அழைத்து வந்து விழாவை சிறப்பிக்க வைப்போம் ,

தற்போது இந்த அரசு அதனை முன்னெடுத்து நடத்த முயற்சித்தாலும். மக்களுக்கு விழா நடப்பது பற்றிய தகவல் சென்றடையவில்லை ‘நான் குற்றமாக சொல்லவில்லை அனுபவத்தில் சொல்கிறேன். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்தித்தாளில் அதிக விளம்பரங்கள் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு தெரிந்திருக்கும். ஜோலார்பேட்டை உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முறையாக அழைப்பு விடுக்கவில்லை,

இதையும் படியுங்க  If you are new to the world of sex toys

எங்களுடைய அனுபவத்தில் சொல்கிறோம். கோடை விழா ஏற்பாடுகளை இன்னும் சிறப்பாக செய்து சினிமா பிரபலங்களை அழைத்து வந்து கவர்ச்சியான முறையில் நடத்த வேண்டும்” கடந்த ஆட்சியில் அவசரம் அவசரமாக நடத்தப்பட்ட விழாவை போல் அல்லாமல் இரண்டு நாள் நடைப்பெற்றது மகிழ்ச்சி, சொதப்பலுக்கு கலெக்டரே காரணம் என முடித்தார் .இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மாலை நாய் கண்காட்சியுடன் விழா முடிந்தது

புதிய அரசு பொறுப்பேற்று நடக்கக்கூடிய கோடை விழா என்பதால் வித்தியாசத்தை எதிர்பார்த்து வந்த சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் இது வழக்கமாக நடைப்பெறும் கோடைவிழா போல் இல்லாமல் ,எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் வனத்துறையினர் வைத்த 10 பூச்செடிகளை தவிற வேறு எதுவும் கண்காட்சியில் இடம்பெறவில்லை இது வழக்கத்துக்கு மாறாக நடைப்பெற்ற கோடை விழா.! என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஏமாற்றத்துடன் புலம்பியபடி சென்றதை பார்க்க முடிந்தது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago