Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vijay

தமிழகத்தில் 2031-ஆம் ஆண்டிற்குள் சேரியில்லா நகரங்களை உருவாக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் இலக்கு நிர்ணயித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆய்வு கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான வீட்டு வசதியை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்கால நகர வளர்ச்சி குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் விவாதிக்கப்பட்டன.

வாரிசா… எமனா? 150 கோடி சொத்துக்காக பெற்ற தந்தையை தீர்த்துக்கட்டிய பாவி மகன்!

முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், கடந்த 2-ஆம் தேதி முதல் வரும் 22-ஆம் தேதி வரை ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் தொடர் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படியுங்க  சேகர் பாபு ராஜினாமா… துறைமுகம் தொகுதியில் களமிறங்கும் மு.க.ஸ்டாலின்..! விஜய் ஃபீவர்..!?

முக்கிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள்
2031-க்குள் சேரியில்லா நகரங்கள்: நகர்ப்புற மேம்பாட்டின் முக்கிய இலக்காக ‘ஸ்லம் ஃப்ரீ சிட்டீஸ்’ திட்டத்தை முன்வைத்து, 2031-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை சேரியில்லா மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மலிவு விலை வீடுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

“இனி கேஸ் தீர்ந்தா நோ டென்ஷன்! 15 நிமிஷத்துல ஸ்விக்கியில் வரும் சிலிண்டர்! கேஸ் கனெக்ஷன் கூட தேவையில்லை பாஸ்!”

4 முக்கிய நகரங்களின் வளர்ச்சி: எதிர்கால மக்கள் தொகை மற்றும் நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒற்றைச்சாளர முறை
பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் எளிதாகப் பயன்பெறும் வகையில், இணையதளம் மூலமாக விரைவாக கட்டட அனுமதி வழங்கும் ஒற்றைச்சாளர முறையைச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்
இந்த உயர்நிலைக் கூட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சர் ராஜ்குமார், நிதி அமைச்சர் மரியவில்சன், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க  “உங்க வேலையை இங்க காட்டக்கூடாது..!” சி.விஜயபாஸ்கருக்கு விஜய் வைத்த சைலண்ட் ‘செக்..!

“இன்ஸ்டாகிராமில் அத்துமீறிய 400 வக்கிர நெட்டிசன்கள்! அதிரடி முடிவெடுத்த நடிகை காயத்ரி ரெமா!”

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி, “அனைவருக்கும் தரமான வீடு” என்ற இலக்கை நோக்கிய தமிழக அரசின் இந்த நகர்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago