https://republictn.com/

டம்மியாகும் அருண் ஐபிஎஸ்..! விஜய் வைத்த செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் நடக்கும் மாஸ் மாற்றம்..! என்கிற தலைப்பில் அருண் ஐபிஎஸ் குறித்து கடந்த 8ம் தேதி நமது ரிபப்ளிக் தமிழ்நாடு செய்தியில் வெளியிட்டு இருந்தோம். அத்துடன் நேற்றைய தினம், தப்பு செய்து விட்டோமோ..? மீண்டும் ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..! CM விஜயின் கறார் மூவ்..! என்கிற தலைப்பிலும் அடுத்து நடக்கப்போகும் ஐபிஎஸ், ஐஏஎஸ் மாற்றம் குறித்தும் நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக இருந்த அருண் ஐபிஎஸ் தற்போது ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. லஞ்ச ஒழிப்பு துறையினர் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக இருந்து வந்த மகேஸ்வரி கூடுதலாக லஞ்ச ஒழிப்பு துறை இந்த ஏடிஜிபி பொறுப்பை கவனிப்பார் எனவும் தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

முன்னதாக அருண் ஐபிஎஸ் ஏற்கனவே சென்னை காவல் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு முன்னதாக அவர் இந்திய தேர்தல் ஆணையத்தால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு எந்தவிதமான பணியும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. அதன் பின்னர் அவருக்கு லஞ்ச ஒழிப்பு துறையின் ஏடிஜிபியாக பணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பொறுப்பு வகித்த காலங்களில் பல்வேறு ரைடுகள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக கார்பதிவாளர் அலுவலகம் அதேபோன்று மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை அடுத்தடுத்து திடீரென மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏடிஜிபியாக இருக்கக்கூடிய அருண் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை பிரிவிலிருந்து அவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எந்தவிதமான பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை. 353 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் “லுக் அவுட்” நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை மென்மையான போக்கைக் கடைபிடித்ததால் கடுப்பான விஜய், அருணை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பொறுப்பில் இருந்து மாற்றியதாகக் கூறப்படுகிறது.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 hours ago at 16 hours ago