https://republictn.com/

திமுக, அதிமுக, பாஜக இந்த மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து தவெக அரசுக்கு எதிரா களத்தில் இறங்கி இருப்பதாக பரபரப்பான விவாதம் எழுந்திருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகிய இருவரும் பேசிய விஷயம்தான் காரணம்.

தேர்தல் முடிவு வந்த உடனே திமுகவும் அதிமுகவும் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்ததாக ஒரு பேச்சு எழுந்தது. இதுமிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், திமுக கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சி நிர்வாகிகள் அதை பொதுவழியிலேயே உண்மையை பேசி வெளிப்படுத்தினார்கள். அதன்பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி சேர்ந்தால் என்ன தப்பு என்கிற அடுத்த ஒரு விவாதம் எழுந்தது.

அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சி விரைவில முடிவுக்கு வரும். எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் என பேசி வந்தார். அதற்கு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் முடிவுக்கு எதிராக நாம் எதுவும் செய்யக்கூடாது. மக்கள் முடிவை மதிக்கணும் எனக்கூறினர். இப்போ புதிதாக ஒரு விவாதம் எழுந்திருக்கிறது. திமுக -அதிமுக பாஜக மூன்று கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து தவெக அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்படணும் என்கிற ஒற்றை புள்ளியில் களத்தில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இப்போது கிட்டத்தட்ட இரண்டாம் கட்ட தலைவர் என்கிற நிலையில் அவர் வைக்கிற முன்வைக்கிற கருத்துக்கள் விவாதம் ஆகி வருகிறது. அவருடைய செயல்பாடுகளும் ரொம்ப பேசப்படுகிறது. இப்போது புதிதாக ஒரு விஷயத்தை பேசி இருக்கிறார். ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறு மாதத்தில் முதலமைச்சர் ஆவார்” எனச் சொல்லி இருக்கிறார். அது வந்து வழக்கமாக அவ்வப்போது பேசப்பட்டு வருகிற ஒரு தகவலாக இருந்தாலும் கூடுதலாக ஒரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.

திமுக எம்.பி., திருச்சி சிவா போன்றவர்கள் டெல்லில் அமைச்சர்களாக ஆவார்கள் என்றும் பேசி இருக்கிறார். அதுதான் ரொம்ப முக்கியமாக பார்க்கப்படுகிறது. இப்போது இருக்கிற சூழலில் திமுக எம்பி மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்றால் அது பாஜக-உடன் கூட்டணி சேர்ந்தால் மட்டும்தான் சாத்தியம். பாஜக நினைத்தால் மட்டும்தான் அது முடியும்.

அப்படியானால் திமுகவும், பாஜகவும் இணைந்து செயல்பட முடிவெடுத்து ஒருக்கிறார்களா? என்கி விஷயம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு முக்கியமான விஷயத்தை இதே நேரத்தில் சொல்லி இருக்கிறார். ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த நேரத்திலும் கோபம் வரலாம். அப்படி கோபம் வந்தால் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்” எனக் கூறி இருக்கிறார். அதுவும் இல்லாமல் மு.க. ஸ்டாலினுக்கு கோபம் வரணும்” எனக் கூறி இருக்கிறார். ஒரே நேரத்தில் இவர்கள் இருவரும் சொல்லி இருக்கும் இதன் பொருள் என்னவென்றால் திமுகவும். அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக சேர்ந்து களத்தில் தீவிரமா செயல்படுகிறார்களா? தவெக அரசுக்கு எதிராக அவர்கள் சொல்லி வரும் ஆட்சியை
வீட்டுக்கு அனுப்பியாக வேண்டும் ஆட்சியை வந்து கவிழ்க்க வேண்டும். அடுத்து நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற நிலையில்தான் பேசி வருகிறார்களா? அதன் வெளிப்பாடுதான் இதுவா? என்கிற விவாதம்தான் அதிகரித்து இருக்கிறது.

ஏனென்றால் இப்போது திமுக, அதிமுகவின் முக்கியமான இந்த நிர்வாகிகளின் பேச்சை நாம் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. அதாவது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக பேசுகிறார்கள் அல்லது ஒரு ஆதங்கத்தில் பேசுகிறார்கள் என அதை கடந்து போக முடியாது. ஏனென்றால் இவர்கள் இருவரும் முக்கியமான நிர்வாகிகள். இந்த மாதிரி பேசும்போது முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்துகிறார்களா? அவர்களது கட்சி சார்பாக எடுக்கப்படுகிற முயற்சிகளை இவர்கள் பொதுவழியில் வெளிப்படுத்துகிறார்களா என்கிற கேள்வி எழுகிறது.

இதே நேரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஒரு கருத்தை சமீபத்தில் சொல்லி இருக்கிறார். திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைப்பதற்கு முயற்சிக்கிறார்களா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டபோது அரசியல் சூழல் அமைந்தால் எதுவுமே சாத்தியம் என்றார். திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்தால் அது தப்பு கிடையாது. நியாயம்தான் என்கிற வாதத்தையும் அவர் முன் வைக்கிறார்.

அதிமுக கூட்டணியில் இருக்கிற அவர் சொல்வதையும் சாதாரணமாக புறந்தள்ள முடியாது. அப்படியானால் வேறு ஏதாவது வேலை நடக்கிறதா? ஒரு முயற்சிகள் நடக்கிறதா? என்கிற விவாதம் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் திமுக, அதிமுக, அமமுக எல்லாருமே தவெக அரசு மீது குதிரை பேரக் குற்றச்சாட்டை சொல்லி ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

திமுக கூடுதலாவே புகார் சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் இன்றும் ஒரு புகார் கடிதத்தை கொடுத்திருக்கிறார்கள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதை வைத்து அதிமுகவில் இருந்து பிரிந்து தவெகவில் இணைந்திருக்கிற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதையும் வைத்து திமுக கொஞ்சம் வலுவாகவே குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருக்கிறார்கள். இது போன்ற சூழலில் மறுபடியும் ஏதாவது ஒன்று நடக்கிறதா? இல்லை தொண்டர்களுக்காக பேசுகிறார்களா? என்பது மிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில தவெக தரப்பிலும் அமைச்சர் நிர்மல் குமார், ”இப்போது வரை திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து தவெக அரசுக்கு எதிராக செயல்படுவதற்கு முயற்சி செய்கிறார்கள்” என்று சொல்லி வருகிறார். இது எல்லாமே ஏதோ ஒன்று நடக்கிறது என்கிற ஒற்றைப்புள்ளியில் வந்து நிற்கிறது. ஒருவேளை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி வெளிப்படையாவே இன்னும் தெரிய ஆரம்த்தால் தமிழக அரசியலில் வேறு மாதிரி மாற்றம் எடுக்கும். விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்திருக்கிறார். பாஜகவை எதிர்ப்பதற்கு தவெகவும் திமுகவும் இணைந்து பயணிக்க வேண்டும் என்கிறார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வரவேற்றுள்ளார்.

அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியனும் இதே போல தவெகவும், திமுகவும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக பயணிக்க வேண்டும் என்கின்றனர். ஒருவேளை இதுபோல முயற்சிகள் ஈடுபடுவது இவர்களுக்கு தெரிந்துதான் இந்த மாதிரி ஒரு கருத்தை வரிசையாக முன் வைக்கிறார்களா? என்பதையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 hours ago at 19 hours ago