Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

”அவரை புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் என்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன்” என திருமா மீது கிண்டலாக தான் தெரிவித்த கருத்திற்கு வைகோ அதனை வாபஸ் பெறுவதாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ”நான் தெரிவிக்க விரும்புவது யார் மேல எனக்கு வருத்தம் கிடையாது. ஒரு கேள்வி கேட்டார்கள். தவெக அமைச்சரையிலும் நாங்கள் பங்கெடுக்கிறோம். திராவிட முன்னேற்ற கழக கூட்டணியிலும் தொடர்கிறோம். தவெக-வுக்கும், திமுகவுக்கும் ஒரே நேரத்தில் ஆதரவு என்று விடுதலை கட்சி தலைவர் என் அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்கள் சொன்னார்கள்.
அந்த செய்தி என்னை தூக்கி வாரி போட்டது. இந்த வடதுருவமும், தென் துருவமும் சேர முடியுமா?
எப்படி திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அமைச்சரவையில் பங்கேற்க முடியும் என நினைத்ததால் நான் அதிர்ச்சியானதால் ‘நோபல் பரிசு கொடுக்கலாம்; என்று நான் சொன்னேன். அவரை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை.

அவர் அரசியலில் வளர வேண்டும் என்று என்னால் இயன்ற அத்தனை விதமான நிகழ்வுகளிலும் அவருக்கு உதவி இருக்கிறேன். அவர் பெரிய தலைவராக வரணும். இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்தான் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்ற முறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு ஊக்கமளித்து வந்திருக்கிறேன். என்னால் இயன்ற அளவுக்கு பக்கபலமாக நின்றிருக்கிறேன். எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்பேன்.

திருமா மீது எந்த கோபமோ, வருத்தமோ எதுவும் கிடையாது. இந்த சொற்களை நான் சொன்னதற்காக அவர் மனம் புண்படுமானால் நான் அந்த சொற்களை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனக்கு இம்மி அளவும் ஒரு கசப்பு எதுவும் எழுச்சி தமிழர் மேல கிடையாது.

அவர் இந்த நாட்டில் நல்ல ஒரு தலைவர். அந்த மக்களுக்கு மட்டுமல்ல மொத்த தமிழ்நாட்டுக்கே பயன் தரும் விதத்திலே பணியாற்றி வருகிறார். தனக்கென்று ஒரு குடும்பம் கிடையாது. அவருக்கு நான் எத்தனையோ முறை அவரிடம சொல்லிக்கூட இருக்கிறேன். ஆகவே அவர் கருத்து சொல்வது அவருடைய கருத்து உரிமை. ஜனநாயக உரிமை. அவரை புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் என்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன்” என திருமா மீது கிண்டலாக தான் தெரிவித்த கருத்திற்கு வைகோ அதனை வாபஸ் பெறுவதாக கூறியிருக்கிறார்.

நேற்றைய தினம் என்ன பேசியிருந்தார் வைகோ? ”அமைச்சரவில் நாங்கள் விசிக இடம் பெற்று இருந்தாலும் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு நாங்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என திருமா கூறியிருக்கிறார். இதை பற்றி உங்க நிலைப்பாடு என்ன எனக் கேட்டதற்கு ”அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும்” என்றார் வைகோ. இன்றைய தினம் அவர் தனக்கு நண்பர்தான் என கூறி நேற்று தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago