Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Arun IPS

லஞ்ச ஒழிப்பு துறையில் இருக்கிற கமிஷனர் பதவி இதுவரைக்கும் கூடுதல் பொறுப்பை இன்னொரு அதிகாரி பார்த்துக் கொண்டு வந்த நிலையில் அந்த பதவிக்கு முழுநேர கமிஷனரை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு துறையோட இயக்குனராக சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் நியமிக்கப்பட்டிருக்கார். இவருக்கு மேல் அதே துறையில் ஆணையாளர் என்கிற ஒரு பதவி இருக்கிறது. இந்த பதவியை இதுவரைக்கும் உள்துறை செயலாளர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். துறையோட
முக்கிய முடிவுகளை எடுக்கிறது எல்லாமே இயக்குனர்தான். முடிவெடுத்துவிட்டு கமிஷனரிடம் ஒப்புதல் வாங்கினால் போதும் என்கிற மாதிரியான நிலை நீடித்து வந்த சூழ்நிலையில் இப்போது அந்த பதவிக்கு முழுநேர அதிகாரியை கமிஷனரை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது.

இதன் மூலம் தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் லஞ்சத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால் இந்த முடிவு என்கிறார்கள்.

இதையும் படியுங்க  மு.க.ஸ்டாலினை சந்திக்கும் ராகுல் காந்தி..! சத்தியமூர்த்தி பவனுக்குள் அமைச்சர்கள்..! விஜயின் மாஸ் ஸ்கெட்ச்..!

ஊழலுக்கு எதிராக ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வரும் முதல்வர் விஜய் அடுத்து லோக்யுக்தா அமைப்புக்கு சர்வ சுதந்திரம் கொடுக்கிற சட்ட திருத்தத்தையும் கொண்டு வரப் போறாகிறார். தமிழ்நாட்டில் லோக் ஆயுக்த அமைப்புக்கு முழு சுதந்திரம் கொடுக்கிற மாதிரியான சட்ட திருத்தத்தை கொண்டுவர முதல்வர் விஜய் முடிவு செய்து இருக்கிறார் என்கின்றனர்.

கர்நாடகா மாதிரியான சில மாநிலங்களில் இந்த அமைப்பு ஊழலுக்கு எதிரான சர்வ வல்லமை படைத்த அமைப்பாக இருக்கிறது. லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள் மீது தானே நேரடியாக சோதனை நடத்தி வழக்குகளை பதிவு செய்கிற வலுவான அதிகாரங்களை பெற்றிருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை கொண்ட அமைப்பாக லோக் ஆயுக்தா செயல்பட்டாலும், அமைச்சர்கள் மீதோ,
எம்எல்ஏக்கள் மீதோ ஊழல் நடவடிக்கை எடுக்க மாநில அரசோட அனுமதியை பெற வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. கர்நாடகா மாதிரியான ஊழலை ஒழிக்க எல்லா அதிகாரங்களையும் கொண்ட ஒரு அமைப்பாக உருவாக்க சில சட்ட திருத்தங்களை கொண்டுவர தவெக அரசு முடிவு செய்திருக்கிறது.

இதையும் படியுங்க  "மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை!" 5 மணிநேர விசாரணைக்குப் பின் எ.வ. வேலு அதிரடி! தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த செக்!

தமிழ்நாட்டில 2019ல செயல்பாட்டுக்கு வந்த லோக் ஆயுக்த அமைப்பு ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க மாநில அரசோட அனுமதியைபெற வேண்டிய கட்டாயத்தில் இதுவரைக்கும் இருந்து வருகிற நிலையில் அதை மாற்றத்தால் சட்ட திருத்தம் கொண்டுவர போகிறாராம் முதல்வர் விஜய். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை அதிமுக, திமுக செய்யாமல் விட்ட மாற்றங்களை இப்போது செய்ய முதல்வர் எடுத்திருக்கிற முடிவை அவரோட கட்சிக்காரர்களே ஒரு உதறலோடு தான் பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago