Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி லஞ்சப் புகார் விவகாரம், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனி​யார் கட்​டு​மான நிறு​வனத்​திடம் லஞ்​சம் பெற்​ற​தாக, முன்​னாள் அமைச்​சர் வைத்தி​லிங்​கத்​துக்கு எதி​ராக பதிவு செய்​யப்​பட்ட வழக்கை முடித்து ​வைத்​துள்ளதாக நீதி​மன்​றத்தில் லஞ்ச ஒழிப்​புத் துறை, அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளது.

கடந்த 2011 முதல் 2016 வரையி​லான அதி​முக ஆட்​சிக்​காலத்​தில், வீட்டு வசதித் துறை அமைச்​ச​ராக இருந்த வைத்​தி​யலிங்​கம், சென்னை பெருங்​களத்​தூர் ஸ்ரீராம் ப்ராப்​பர்ட்​டீஸ் அடுக்​கு​மாடி கட்​டிடத்​துக்கு திட்ட அனு​மதி அளிக்க ரூ.28 கோடி லஞ்​சம் பெற்​ற​தாக புகார் எழுந்​தது.

இதுதொடர்​பாக அறப்​போர் இயக்​கம் சார்​பில் 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்​புத் துறை​யில் புகார் அளிக்​கப்​பட்​டது. இரண்டு ஆண்​டு​கள் தாமதத்​துக்​குப் பிறகு, இந்த புகாரின் அடிப்​படை​யில், 2024-ம் ஆண்டு செப்​டம்​பரில் லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​தது.

இதையும் படியுங்க  சிங்கப்பெண்கள் படைக்கு என்னாச்சு? - முதலமைச்சரை நோக்கிப் பாய்ந்த உதயநிதியின் எக்ஸ் (X) ஏவுகணை!

சென்னை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்த இந்த வழக்​கில், வைத்​தி​லிங்​கத்​துக்கு எதி​ரான குற்​றச்​சாட்​டுக்​களுக்கு போது​மான ஆதா​ரங்​கள் இல்லை என்​ப​தால், வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்​புத் துறை சார்​பில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கு, சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்ற நீதிபதி எஸ்.கார்த்​தி​கேயன் முன்​பு, இன்று விசா​ரணை​க்​கு வந்தது. இன்​று லஞ்​ச ஒழிப்​புத்​ துறை ​தாக்​கல்​ செய்​துள்​ள அறிக்​கை மீது முடிவெடுத்த நீ​திப​தி மீண்டும் விசாரிக்க மறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முந்தைய திமுக அரசு முடித்து வைத்த இந்த வழக்கை தற்போதைய தவெக அரசு மீண்டும் விசாரிக்க முடிவு எடுத்துள்ளது

இந்த மறு உத்தரவின் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதால், இந்த விவகாரம் அ.தி.மு.க வட்டாரத்திலும் தமிழக அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

இதையும் படியுங்க  அப்பா வீட்டிலேயே இருக்கட்டும்… 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவியை விடமாட்டேன்..! பதவி வெறியில் உதயநிதி..?
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago