Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், தன்னுடைய முதல் உரையிலேயே ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மாநிலங்கள் வலுவடையும்போதுதான் இந்தியா வலிமையான நாடாகும் என்று முழங்கியவர்.

தமிழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த ஐந்து மிக முக்கியமான மாஸ்டர் பிளான்களை முன் வைத்துள்ளார். முதலாவதாக கொங்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கனவான இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை கோயம்புத்தூரில் அமைக்க அனுமதி கூறியுள்ளார். இதற்கு தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும் என்று உறுதி அளித்த அவர், இதன் மூலம் ஏழை- எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்டினார். இரண்டாவதாக தமிழகத்தின் போக்குவரத்து நரம்பாக விளங்கும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு முதல் திருச்சி வரை 6 வழி சாலையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்ய கோரினார். மேலும், சென்னையை கன்னியாகுமரியுடன் இணைக்கும் பிரம்மாண்ட அதிவேக ரயில் திட்டத்தை தொடங்கவும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

இதையும் படியுங்க  ஸ்டாலின் தோல்விக்கு இதுதான் காரணம்.. தவெக அரசு பாஜக-விடம் பம்முவதுதான் நல்லது..! -விசிக எம்.பி

மூன்றாவதாக வடசென்னை போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாதவரம் முதல் சோழவரம் வரையிலான உயர்மட்ட மேம்பாடு சாலை பணிகளை விரைந்து தொடங்க ஒப்புதல் கூறினார். இது வடசென்னை மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு மாற்றும் ஒரு முக்கிய திட்டம் ஆகும். கடைசியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை வெறும் ஏவுதளமாக மட்டும் பார்க்காமல், அதனை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டுமென ஆதரவு கோரிக்கை வைத்தார். திருச்சி- சென்னை சாலையை இதற்கான முதன்மை இணைப்பாக மாற்றி விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் முன்னிலைப்படுத்தப் போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தனது முதல் டெல்லி பயணத்திலேயே மாநில உரிமைகளையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் சமரசமின்றி பேசிய முதல்வர் விஜயின் இந்த ஐந்து மாஸ்டர் பிளான்களை முன் வைத்தார். தமிழகத்தின் உட்கட்டமைப்பு அடுத்த சில ஆண்டுகளில் வேறொரு பரிமாணத்தை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு.. எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

இதையும் படியுங்க  நீ யாருக்கு பொறந்த..? ஆ.ராசாவின் சர்ச்சைப்பேச்சு..! காலையிலேயே இடியாய் இறங்கிய அதிர்ச்சி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago