Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா?” என அவர் கேள்வி எழுப்பியதுடன், “சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவகாசம் வேண்டுமா?” என்றும் விமர்சித்துள்ளார்.

“டைம் எடுத்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்” எனவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்ட அவர், கடலூரில் 25 வயது பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து விமர்சனம் செய்த அவர், பெண்கள் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அரசியல் கட்சிகளின் விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago