Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூன் 9, 2026) மாலை 5 மணிக்கு முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, அவசர காலங்களில் விரைவாக நடவடிக்கை எடுக்கவும் இந்தத் தனிப்படை செயல்பட உள்ளது.

முன்னதாக மே 29ஆம் தேதி தொடங்கப்பட இருந்த இந்தத் திட்டம் பல்வேறு காரணங்களால் இருமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திட்டத்தின் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது.

இதற்காக ராஜரத்தினம் மைதானத்தில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டம் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படியுங்க  "ஆடம்பரம் வேண்டாம், மக்களுக்கு 10 நாளில் தீர்வு! பெரம்பூரில் மிரட்டும் முதல்வர் விஜய்யின் மாடல் அலுவலகம்!"

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago