https://republictn.com/

பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சரின் கருத்துக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியதில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது, மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு போராடி பெற்ற உரிமையை கைவிடுவது மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், முதலமைச்சர் விஜயின் ஒப்புதலோடுதான் இவ்வாறு கூறுகிறாரா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 minutes ago at 45 minutes ago