https://republictn.com/

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, உடனடியாக ஆளும் கட்சியான தவெகவில் இணைத்துக்கொண்டது ஜனநாயக படுகொலையென கடுமையாக கண்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு எதிராக, எந்த காரணமும் இன்றி வெற்றி பெற்ற வெறும் 20 நாட்களிலேயே சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, அடுத்த சில நிமிடங்களிலேயே ஆளும் கட்சியில் இணைத்துக்கொள்வது மோசடியான செயல் என்றும், இது ஜனநாயகத்திற்கு எதிரான மிகப்பெரிய துரோகம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், “இது குதிரைப் பேரத்தைக் காட்டிலும் மோசமான அரசியல் கலாச்சாரம். தமிழ்நாடு இதுபோன்ற சூழலை இதுவரை சந்தித்ததில்லை. மக்களின் வாக்கையும் தீர்ப்பையும் அவமதிக்கும் செயல் இது” என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலின் வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும், பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்து அவரை வெற்றி பெறச் செய்ததாகவும் கூறினார்.

மேலும், “மக்களின் நம்பிக்கையை ஏமாற்றி தேவையற்ற இடைத்தேர்தலை திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இடைத்தேர்தல் வந்தால் இந்த நான்கு பேரும் தோல்வி அடைவார்கள். தேவையானால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்தும் சூழல் உருவாகும்” என்றும் எச்சரித்தார்.

அதேபோல், மக்களின் கருத்தை அலட்சியப்படுத்த வேண்டாம். தமிழ்நாட்டில் மேகதாது உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகள் உள்ள நிலையில், ஜனநாயகத்திற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நல்லாட்சியில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, சட்டமன்றத்தில் குதிரைப் பேரத்தில் ஈடுபட மாட்டோம் என கூறியவர்கள் தற்போது அதைவிட மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியல் கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago