https://republictn.com/

சென்னை கண்ணகி நகரில், முன்விரோதக் கொலைக்கு பழிக்குப் பழியாக இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், துரைராஜ் என்பவரை கும்பல் ஒன்று சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, சண்முகம் மற்றும் சிலம்பரசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago