Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேடநத்தம் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி, தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாக தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் போலீசார் ஒரே மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், நீதிமன்ற விசாரணையும் நிறைவடைந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "சொல்லிப் பார்த்தாங்க கேட்கல.. அப்புறம் நடந்ததே வேற லெவல்! கடலூர் அரசுப் பள்ளியில் அதிரடி!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago