தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருடன் காணொளி மூலம் சென்னையில் இருந்தபடி அமைச்சர்கள் தலைமை செயலர் உள்ளிட்டோர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட பெண் ஆட்சியர் ஒருவருக்கு சர்ச்சைக்குரிய வகையில் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்த தகவல் வெளியாகியது. இந்தநிலையில் அது தற்போது பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று தலைமை செயலகத்தில் இருந்து தலைமை செயலாளர், முக்கிய அமைச்சர்கள் சிலர் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட பெண் ஆட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எந்தவிதமான சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தியையும் அந்த பெண் ஆட்சியருக்கு நான் அனுப்பவில்லை என தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தொடர்ந்து மறுத்து வருகிறார். இருந்தபோதும் அவர் குறிஞ்செய்தி அனுப்பியதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது காணொளி காட்சி வாயிலாக அந்த பெண் மாவட்ட ஆட்சியருடன் லோசனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த மாவட்ட ஆட்சியர் சென்னைக்கு வரவழைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அவரை நேரில் வரவழைத்து என்ன நடந்தது என்பது தொடர்பாக விவரங்களை கேட்டறிய முக்கிய அமைச்சர்கள் சிலரும், தலைமை செயலாளரும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
எனவே மாவட்ட ஆட்சியர் சென்னைக்கு வருகை தந்து நேரில் தனக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அனுப்பி இருந்த அந்த குறுஞ்செய்தி தொடர்பான சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து அவர் எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தற்போது இந்த புகாரை பெற்றிருக்கக்கூடிய அமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்டவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை கட்சி ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான பரிந்துரையை வழங்குவதற்கான சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
