
விஜய் சேதுபதிக்கு சர்வதேச அங்கீகாரம் இந்தியாவில் இவர்தான் முதல் முறை – பிரபல இந்திய ஹீரோவுக்கு கூட கிடைக்கலையே …
தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இப்போது வெறும் தமிழ்நாட்டு ஹீரோ இல்லை. இந்தியாவின் முகமாக மாறிவிட்டார்
அமெரிக்காவின் நியூயார்க் – மேன்ஹாட்டனில் வருகிற நவம்பர் 23, 2026 அன்று நடக்கவுள்ள 54-வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் (International Emmy Awards) விருது வழங்கும் `Presenter`-ஆக விஜய் சேதுபதி தேர்வாகியுள்ளார்.
இதுதான் ஹைலைட் , இந்த சர்வதேச எம்மி மேடையில் இதுவரை எந்த இந்திய நடிகரும் விருது வழங்கியதில்லை. விஜய் சேதுபதிதான் முதல் இந்திய நடிகர்.
இது அமெரிக்க டிவிக்கான பிரைம் டைம் எம்மி இல்லை. அமெரிக்காவுக்கு வெளியே எடுக்கப்பட்ட சிறந்த டிவி படைப்புகளுக்கு, சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமி வழங்கும் உலகின் மிகப்பெரிய கௌரவம் இது.
இதற்கு முன் நடிகைகளில் 2016-ல் பிரியங்கா சோப்ரா பிரைம் டைம் எம்மியில் விருது வழங்கினார். ஆனால் நடிகரில் சர்வதேச எம்மியில் – இவர்தான் ஃபர்ஸ்ட்!
ஒரு உண்மையை தெளிவுபடுத்துவோம் – FACT CHECK சோஷியல் மீடியாவில் பலர் நினைப்பது போல, விஜய் சேதுபதிக்கு எம்மி விருது கிடைக்கவில்லை.
அவர் விருது வாங்க போகவில்லை. விருது கொடுக்க போகிறார் ,..! அதுவே பெரிய விஷயம். ஏன்னா, உலக சினிமா அவரை இந்தியாவின் பிரதிநிதியாக அங்கீகரித்திருக்கிறது.
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் to எம்மி மேடை – ஒரு காலத்தில் சென்னை ஷோரூமில் துணி விற்றவர். பிறகு சினிமாவில் சின்ன சின்ன வேடங்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். My goal was to escape poverty என்று அவரே சொன்ன அந்த மனிதன், இன்று நியூயார்க் மேடையில் நிற்க போகிறார்.
96, மகாராஜா, விக்ரம், ஜவான் என்று நடிப்பால் மட்டுமே ஜெயித்தவர். பரம்பரை இல்லை. பின்புலம் இல்லை. நடிப்பு மட்டுமே மூலதனம் , அதனால்தான் ரசிகர்கள் சொல்கிறார்கள் – பிரபல இந்திய ஹீரோவுக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் இவருக்கு கிடைத்தது என்று
சோஷியல் மீடியாவில் என்ன பேச்சு? #VijaySethupathi #EmmyAwards #ProudMoment என்று இந்தியா முழுக்க ட்ரெண்ட். ரசிகர்கள் Tamilan ✅ Indian ✅ என்று இரண்டு விதமாகவும் பெருமைப்படுகிறார்கள். சிலர் இவரை விட தகுதியானவர்கள் இருக்கிறார்களா? என்று விவாதிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் Well Deserved என்ற கொண்டாட்டம்தான்.
இது விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த பெருமை இல்லை. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த உலக அங்கீகாரம்.
தமிழ் மண்ணில் பிறந்து, இந்தியாவின் பெருமையை உலக மேடையில் உயர்த்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு – Republic | தமிழ் – சார்பில் வீர வாழ்த்துக்கள்
நவம்பர் 23 – நியூயார்க் மேடையில் தமிழன் நிற்க போகிறான். காத்திருப்போம்.
