பிள்ளை வளர்ந்த வேகத்தைப் பார்த்து பயப்படுகிறேன்!” – AI-யின் தந்தையே சொன்ன அந்த ‘செர்னோபில்’ எச்சரிக்கை!

2027-ல் உலகம் அழியுமா? இல்லை. ஆனால் ஒரு பெரிய விபத்து வரலாம் என்று AI-யை உருவாக்கியவரே சொல்லிவிட்டார்.

AI உலகின் ‘தந்தை’ என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (78)…  2024-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி.

இவர், 2026 நவம்பர் 3-ம் தேதி, பிரிட்டனின் The Guardian பத்திரிகைக்கு கொடுத்த பேட்டிதான் இப்போது உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறது.

அதில் அவர் சொன்னது பயமுறுத்தல் அல்ல. ஒரு தந்தையின் கவலை என்றே தொடங்குகிறார் 

1. “AI செர்னோபில் வரலாம் ? ஹிண்டன் சொன்ன அந்த ஒரு வரி இதுதான் – Either later this year or next year we’ll see Chornobyl, and that may be enough to make people really pay attention , அதாவது இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம், AI-யால் ஒரு ‘செர்னோபில்’ போன்ற சம்பவத்தைப் பார்ப்போம்.”

அவர் சொன்ன ‘செர்னோபில்’ என்பது அணு உலை வெடிப்பு அல்ல. பாதிப்பின் அளவுக்காகச் சொன்ன உதாரணம் , அவர் கற்பனை செய்யும் சம்பவம் இப்படி இருக்கலாம் – மின்சாரக் கட்டமைப்பு முழுக்க முடங்குவது

வங்கி / நிதி அமைப்பு ஒரு வாரம் முழுக்க ஸ்தம்பிப்பது, அதாவது, AI-யைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு பெரிய சைபர் தாக்குதல், மக்கள் வாழ்க்கையை ஒரே நாளில் நிறுத்திவிடும் அளவுக்கு இருக்கலாம் என்பதே அவர் எச்சரிக்கை.

இதையும் படியுங்க  அரசு வழக்கறிஞர்கள் நியமனம் சர்ச்சை ! குமரியில் ஆடியோ... திருப்பத்தூரில் லிஸ்ட் ரெடி ?

இது உறுதியான கணிப்பு அல்ல. ஒரு எச்சரிக்கை. “இது நடக்கும்” என்று அவர் சொல்லவில்லை. “இது நடக்கலாம், கவனியுங்கள்” என்றுதான் சொல்கிறார்.

2. AI-யை உருவாக்காமல் இருந்திருக்கலாம் – அதே பேட்டியில் அவர் இன்னொரு வரியையும் சொன்னார். அதுதான் அதிகம் பேசப்பட்டது. It might be that we would have been better off never developing it. “மனிதகுலம் AI-யை உருவாக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ ? என்கிறார், 

ஆனால் கவனிக்க வேண்டியவை , ஹிண்டன் தன்னை ‘Doomer’ என்று சொல்லிக்கொள்ளவில்லை. AI-யால் ஒரு “அற்புதமான எதிர்காலம்” வரலாம் என்றும் அவர் நம்புகிறார். அதே நேரத்தில், அது கட்டுப்பாடு இல்லாமல் போனால் என்ன ஆகும் என்ற சந்தேகமும் அவருக்கு இருக்கிறது. இது ஒரு விஞ்ஞானியின் இரண்டு மனம். ஒரு பக்கம் பெருமை. இன்னொரு பக்கம் பயம்.

3. பெரிய நிறுவனத் தலைவர்கள் மீது நேரடித் தாக்கு – இந்தப் பேட்டியில் மிகவும் வைரலான வரி இதுதான்‌ I think [Mark] Zuckerberg and [Elon] Musk and Sam Altman, they understand the risks, and they don’t give a shit. They’d rather have the money. அவர்களுக்கு ஆபத்து தெரியும். ஆனால் அதைப் பற்றி கவலை இல்லை. அவர்களுக்குப் பணம்தான் முக்கியம் என்றார் 

இதையும் படியுங்க  "யோகி பாபு கூட்டம் கூட விஜய்க்கு இல்ல.. முதல்ல உங்க ஆட்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுங்க!" – சினிமா பாணியில் சீண்டிய செல்லூர் ராஜூ!

அதாவது, சாம் ஆல்ட்மேனை “நான் கொஞ்சமும் நம்பவில்லை” என்றும் அவர் சொல்லியிருக்கிறார். இதுதான் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

4. இது முதல் முறை அல்ல… இது ஒரு தொடர்கதை ,.. ஹிண்டன் திடீரென்று இப்படிப் பேசவில்லை. பல வருடங்களாக இதையே சொல்லி வருகிறார்.

2023 – Google-ஐ விட்டு விலகினார். மனிதகுலத்தை எச்சரிக்கவே விலகினேன்” என்றார். AI-யால் புதிய வைரஸ்கள், தானாகக் கொல்லும் ஆயுதங்கள் வரலாம் என்றார்.

2026 செப்டம்பர் 9 – BBC Newsnight: “அடுத்த 10 வருடத்தில் AI-யால் மனிதகுலம் அழிய 10% வாய்ப்பு இருக்கிறது. அது நியாயமான மதிப்பீடுதான்” என்றார். ஆனால் அதுவும் அறிவியல் கணக்கு அல்ல, அவரது தனிப்பட்ட மதிப்பீடு என்பதையும் அவரே சொன்னார்.

2026 செப்டம்பர் 17 – அமெரிக்க காங்கிரஸ் –  “சட்டம் போட காங்கிரஸுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது, அதற்கு மேல் இல்லை” என்றார். “Maybe a year, but not much more than a year” என்பதே அவர் சொன்ன வார்த்தை.

5. அவர் கேட்கும் தீர்வு என்ன ஹிண்டன் வெறும் பயமுறுத்தவில்லை. ஒரு தீர்வையும் சொல்கிறார். மருந்துகளைச் சோதிப்பது போல, AI மாடல்களையும் வெளியிடுவதற்கு முன் கட்டாயமாகச் சோதிக்க வேண்டும். அதற்கு FDA போன்ற ஒரு சுதந்திரமான அமைப்பு வேண்டும் என்கிறார்.

இதையும் படியுங்க  ”டோலியில் மலையேறிய திவ்யாவின் பிணம் - மனமிறங்காத அரசுகள்.!

அதாவது, அவர் நிலைப்பாடு “AI-யை நிறுத்துங்கள்” என்பது அல்ல கட்டுப்பாடு இல்லாமல் ஓடவிடாதீர்கள்” என்பதுதான்.

6. சமூக வலைதளங்களில் இரண்டு அணிகள் – இப்போது இணையத்தில் இரண்டு அணிகள் மோதிக் கொண்டிருக்கின்றன.

ஒரு அணி: “அவரே சொல்கிறார், கேளுங்கள். ஒழுங்குமுறை வேண்டும் அணி  – இன்னொரு அணி: “உருவாக்கிவிட்டு இப்போ பயமுறுத்துகிறார். இது Fear-mongering அணி 

உண்மை எங்கே இருக்கிறது?இறுதி முடிவு – மிகையும், உண்மையும் , மிகை: “2027-ல் AI உலகை அழித்துவிடும்”, “AI பேரழிவு நிச்சயம்” என்று சில தம்நெயில்கள் சொல்வது மிகைப்படுத்தலே 

உண்மை – என்ன ? ஹிண்டன் 2027-ல் ஒரு பெரிய AI விபத்து வரலாம் என்று எச்சரித்திருக்கிறார். அது கணிப்பு அல்ல, எச்சரிக்கை , அவர் பயப்படுவது AI-யைப் பார்த்து அல்ல. கட்டுப்பாடு இல்லாத AI வளர்ச்சியைப் பார்த்து. லாபத்துக்காகப் பாதுகாப்பைத் தள்ளிவைக்கும் பெரு நிறுவனங்களைப் பார்த்து.

ஒரு வரியில் சொன்னால்… AI-யை உருவாக்கிய தந்தையே, “பிள்ளை வளர்ந்த வேகத்தைப் பார்த்து பயப்படுகிறேன், கடிவாளம் போடுங்கள்” என்பதன் அதன் பொருள்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *