America china

உலக நாடுகளில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் மது அருந்தும் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது.

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 10% வளர்ச்சியை எட்டி அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை முந்தி இருக்கிறது இந்தியா. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மது நுகர்வு 10% அதிகரித்துள்ளதாக சர்வதேச மதுபானச்சந்தை ஆய்வு நிறுவனமான ஐடயூஎஸ்ஆர் மதிப்பிட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 21 நாடுகளில் இந்தியாவில் மட்டும்தான் அனைத்து வகையான மதுபானங்களின் நுகர்வும் உயர்ந்திருக்கிறது.

குறிப்பாக பீர் நுகர்வு 16% பிற மதுபானங்களின் நுகர்வு 12%ம் அதிகரித்துள்ளது. விஸ்கி ஓட்கா, ஜின், ஒயின் உள்ளிட்ட மற்ற மதுபான வகைகளிலும் நுகர்வு உயர்ந்திருக்கிறது. ஆனால் உலகின் மிகப்பெரிய மதுபான சந்தைகளில் ஒன்றான அமெரிக்காவிலும் முக்கிய சந்தையான சீனாவிலும் மதுநுகர்வு சரிந்துள்ளது. அமெரிக்காவில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 4%ம் சீனாவில் 3%ம் மதுபான நுகர்வு குறைந்திருக்கிறது. குறிப்பாக பீர் நுகர்வில் அமெரிக்கா 4% சரிவையும் சீனா 2% சரிவையும் சந்தித்துள்ளது. உலக அளவில் மது நுகர்வு 1% சரிவை கண்டுள்ளது.

இதையும் படியுங்க  மருத்துவ வரலாற்றில் சூரியா மருத்துவமனையின் புதிய மைல்கல்..! நெல்லையில் இருதய இரட்டை வால்வு மாற்று அறுவை சிகிச்சை..!

இந்த ஆய்வில் உலகின் மொத்த மதுபான நுகர்வில் 76%த்தை கொண்டுள்ள 21 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த 21 நாடுகளையும் சேர்த்து பார்த்தபோது மது நுகர்வு 1% குறைந்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் சீனாவை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால் மீதமுள்ள 19 நாடுகளில் மதுநுகர்வு 1% அதிகரித்துள்ளது. கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்த் ஆகிய நாடுகள் மதுநுகர்வில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக உள்ளன.

அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, வர்த்தக வரிகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக மக்கள் மதுபானங்களுக்கு செலவிடுவதை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவை பொறுத்தவரை அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து உள்ளதுடன் சந்தையிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால் அங்கும் மதுபான நுகர்வு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் உடல் எடையை குறைப்பது உடல் ஆரோக்கியத்தை பேணுவது என மக்கள் தங்களது வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனால் மது அருந்துவதை கட்டுப்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் சர்வதேச மதுபான நிறுவனங்கள் இந்தியாவை முக்கியமான வளர்ச்சி சந்தையாக பார்க்கின்றன.

இதையும் படியுங்க  உலகில் யாருக்கும் அடிபணியாத நாடு இந்தியா..! ஓஹோவென புகழ்ந்து தள்ளிய ரஷ்ய அதிபர் புடின்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *