தீபாவளிக்கு பிறகு மீண்டும் உயர தொடங்கி உள்ள தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 46% வரை உயரக்கூடும் என வெளியாகி உள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதிலும் ஒரு தங்கத்தின் விலை 6000 டாலர்களை எட்டும் என நிதி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அப்படியானால் தங்கத்தின் விலை எந்த அளவுக்கு உயர போகின்றது? இதற்கான காரணம் என்ன?
பொதுவாகசர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு, பணவீக்கம் மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கொள்கைகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இரக்கங்களை சந்தித்து வருகின்றது.
குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சரிவையும் சந்தித்தது. இதனால் விலை குறைந்த போது, தங்கம் வாங்குவதற்காக காத்திருந்த பலரும் மீண்டும் கொள்முதலில் ஈடுபட்டனர். இப்படியான சூழ்நிலையில் தீபாவளிக்கு பிறகு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. குறிப்பாக நவம்பர் 9ஆம் தேதி ஒரு தங்கத்தின் விலை சுமார் 4129லக உயர்ந்தது.
இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 3.73 லட்சம் ஆகும். இதன் எதிரொழியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தங்கம் சுமார் ரூ.44,760 ஆகவும 22 கேரட் தங்கம் சுமார் ₹32,697வும் இருந்தது. இப்படியான சூழ்நிலையில்தான் அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மார்கன் வெளியிட்டுள்ள தங்கத்தின் விலை குறைத்த கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதன்படி 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5.42 லட்சம் எட்டக்கூடும் என அந்நிறுவத்தின் ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர். அதாவது நவம்பர் 9ஆம் தேதி நிலவிய விலையுடன் ஒப்பிடும் போது, இது சுமார் 46%த்திற்கும் அதிகமான உயர்வாகும். உலக நாடுகளின் மத்திய வங்கியில் தொடர்ந்து தங்கத்தை வாங்குவது சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்புவது போன்றவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என ஜேபி மார்கன் தெரிவித்துள்ளது.
மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவது, அமெரிக்க டாலரின் மதிப்பு, பலவீனம் அடைவது மற்றும் அமெரிக்க பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் குறைவது போன்ற காரணிகளும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. இதனால் தங்கத்தின் மீதான முதலீட்ட ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பல்வேறு சர்வதேச காரணிகள் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலை 46% வரை உயரும் என்பதை உறுதியாக கூற முடியாது. இது தற்போதைய சந்தை நிலவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கணிப்பு மட்டுமே.
சர்வதேச பொருளாதார மாற்றங்கள் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித கொள்கைகள் மற்றும் டாலரின் மதிப்பு போன்றவற்றை பொறுத்து தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
