Writer Trisha Vijay

புத்தகத்தில் கலப்படம் செய்தால் அது ஊழல் இல்லை… வாசகனின் மூளையில் நஞ்சு வைப்பதற்கு சமம்..

கோவை காந்திபுரத்தில், ரூ.300 கோடியில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த பெரியார் அறிவுலகம்… இப்போது தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த ஊழலை வெளியே கொண்டு வந்தவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். ஆனால் அவர் வெளியிலிருந்து பார்த்து சொன்னவர் இல்லை! முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், 2025 நவம்பர் 5-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, புதிதாகத் தொடங்கப்படும் நூலகங்களுக்கான புத்தகங்களைத் தேர்வு செய்து பரிந்துரைக்க ஒரு நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டது.  

காரணம் – புத்தகம்! இந்தக் கதையில் மிக முக்கியமான ட்விஸ்ட்!

அந்தக் குழுவில், நவீன இலக்கியம் மற்றும் இலக்கிய விமர்சனப் புத்தகங்களைப் பரிந்துரைக்கும் துணைக்குழுவின் உறுப்பினராகப் பெருமாள் முருகன் பணியாற்றினார்.  

அதாவது, எந்தப் புத்தகம் நூலகத்துக்குள் வர வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய குழுவில் இருந்தவரே, “உள்ளே வந்தது எல்லாம் போலி!” என்று அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இதுதான் இந்த விவகாரத்தின் மிகப் பெரிய நம்பகத்தன்மை!

அதே குழுவில் இருந்த இன்னொரு எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் சொல்வது இன்னும் அதிர்ச்சி:

“பரிந்துரைத்ததுடன் எங்கள் வேலை முடிந்தது. பரிந்துரைத்த புத்தகங்களை வாங்கினார்களா? என்ன வாங்கினார்கள் என்பது பற்றியெல்லாம் பரிந்துரைத்தவர்களுக்கே தெரியாது!”  

ஒரே ஒரு முறை கூட்டம், அதன் பிறகு ஆன்லைனில் எக்செல் படிவத்தில் புத்தகப் பட்டியல் அனுப்பியதுடன் சரி. இரண்டு மாதம் கழித்து மதிப்பூதியமாக ரூ.2,000 வந்தது 

இதையும் படியுங்க  Cock rings are easy but powerful instruments that enhance

அப்படியென்றால், குழு பரிந்துரைக்காத புத்தகங்கள் எப்படி உள்ளே வந்தன? யார் கொண்டு வந்தார்கள்? இதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி!

அகல் விளக்கு… யாருக்கும் தெரியாத பதிப்பகம்! பெருமாள் முருகன் புதிய தலைமுறைக்கு சொந்தமான’சிந்தை’ தளத்தில் எழுதிய கட்டுரையில் சொன்னது…

“தமிழ் நூல்கள் பிரிவில் ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தின் பெயரில் சுமார் 1,800 நூல்கள் இருக்கின்றன. அந்தப் பதிப்பகத்தை 40 வருஷமாக இலக்கிய உலகில் இருக்கிறவங்களுக்கே தெரியாது!”

மற்ற பதிப்பகங்கள் ரூ.350-க்கு விற்கும் 300 பக்க நூலை, இங்கே ரூ.1,445-க்கு வாங்கியிருக்கிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதைவிடப் பெரிய அதிர்ச்சி – உள்ளே இருக்கும் தகவல்கள்!

‘நாலடியார் தமிழின் முக்கியமான கவி’ என்று ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள். ‘கீழடியில் நந்தி சிலை கிடைத்தது’ என்று இன்னொரு புத்தகத்தில் உருட்டியிருக்கிறார்கள். பாரதியார் பெயரில் AI கதைகள் வேறு!

இதைப் பார்த்து கொதித்துப்போன எம்.பி. சு.வெங்கடேசன், “புத்தகத்தின் பெயரில் நடக்கும் ஊழல், நிரந்தரமாக நஞ்சூட்டும் செயல். போலி நூல்களை உடனே அகற்ற வேண்டும்” என்று கொந்தளித்திருக்கிறார்.

‘த்ரிஷா விஜய்’ – இந்தப் பெயரே போதும்! இந்த விவகாரத்தில் மிகப் பெரிய காமெடி – இல்லை, டிராஜெடி – எழுத்தாளர்கள் பெயர்தான்.

பட்டியலைப் பாருங்கள்…

திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் ஆதித்தன், சுமேகா விஜய், விஜய் செல்வம்…எல்லாமே ‘விஜய்’ என்று முடிகிறது!

இதையும் படியுங்க  Examine the Stitching and CraftsmanshipAuthentic luxury

அதேபோல், ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், தாமரை பன்னீர், ராணி பன்னீர், தாமரை கார்த்தி, மோனிகா சூர்யா, மோனிகா ரவி… ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் போல் இருக்கிறது!

பெருமாள் முருகன் சொல்வது இதுதான் – “இந்தப் பெயர்களை இதற்கு முன் தமிழ் இலக்கிய சூழலில் யாரும் கேட்டதே இல்லை. இவை எல்லாம் போலியானவை, AI-யால் உருவாக்கப்பட்டவை!”

நம் பழமொழிதான் ஞாபகம் வருகிறது… “பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்!”

சினிமா ஹீரோயின் பெயர் போல ‘த்ரிஷா விஜய்’ என்று வைத்தால், யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தார்களா?

ஒரு பெயரை வைத்தே, இது போலி என்று கண்டுபிடித்திருக்கலாமே… நூலக நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது?

நிஜ எழுத்தாளர் பெயரிலும் போலி நூலா? இதில் இன்னொரு ட்விஸ்ட்!

சக்தி சூர்யா போன்ற உண்மையான எழுத்தாளர் பெயரிலும் அகல் விளக்கு நூல் வெளியிட்டுள்ளதாகவும், அவருக்கே அது தெரியாது என்றும் சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது.

இது உண்மையென்றால், இது வெறும் ஊழல் இல்லை. எழுத்தாளரின் பெயரைத் திருடிய மோசடி!

இப்போது அரசியல் ஃபைட்: திமுக vs தவெக திமுக கேட்கிறது:

“போலி நூல்களில் மட்டும் ஏன் ‘ஜூன் மாதம்’ முத்திரை இருக்கிறது? கலைஞர், அண்ணா நூலகங்களில் இல்லாத போலி நூல்கள், பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி வந்தது? நூல்களைப் பார்க்காமல் திறப்பு விழா நடத்தியது ஏன்? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?”

இதையும் படியுங்க  Lelo's high-quality options are equal parts elegant and

தவெக ஐ.டி.விங் பதிலடி:

“இருங்க… ஆவணம் இருக்கு! அகல் விளக்கு பதிப்பகத்துக்கு திமுக ஆட்சியில்தான் ஆணை கொடுக்கப்பட்டது. ந.க.எண்: 7781/எ1/2025, நாள்: 14/02/2026. பீனிக்ஸ் பதிப்பகத்துக்கு 13.02.2026-ல் ஆணை. தெரியாதது போல் நடிக்காதீங்க!” ஆணை போட்டது ஒரு ஆட்சி… புத்தகம் உள்ளே வந்தது, முத்திரை குத்தியது, திறப்பு விழா நடந்தது இன்னொரு காலத்தில்… இதுதான் இரு தரப்பும் மாறி மாறி சொல்லும் கதை.

யார் சொல்வது உண்மை? கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். அரசியல் மேடையில் கத்துவதால் உண்மை வராது. தமிழுக்கு என்ன ஆகும்? இளைஞர்கள் ஏற்கனவே புத்தகம் படிப்பதைக் குறைத்துவிட்டார்கள்.

இந்த நிலையில், நூலகத்துக்குப் போய் தப்புத் தப்பான தகவலைப் படித்தால்… அவன் நூலகத்தையே நம்ப மாட்டான்!

அதனால்தான் எழுத்தாளர்கள் சொல்கிறார்கள் – “இது ஊழல் இல்லை, தமிழுக்கு செய்த துரோகம்!”

இப்போது அரசு செய்ய வேண்டியது 3 விஷயம்தான்:

1. போலி நூல்களை உடனே தூக்கி, பட்டியலை வெளியிடு!

2. காசு எங்கிருந்து, எங்கே போனது என்று முழு விசாரணை நடத்து!

3. இனி நூல் வாங்கும்போது எழுத்தாளர், பதிப்பகம், உள்ளடக்கம் எல்லாம் சரிபார்!

குற்றவாளி திமுகவாக இருந்தாலும் சரி, தவெகவாக இருந்தாலும் சரி… தமிழ் வாசகனை ஏமாற்றியவனுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *