பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் தேவையில்லாத சர்ச்சைகளை தூக்கிவிட்டு, இரண்டு கேள்விகளை மட்டும் பார்ப்போம்.
கண்ணோட்டம் 1: திமுக விளக்கம் – முத்திரை தான் சாட்சி திமுக சொல்வது ரொம்ப சிம்பிள். கட்டியது நாங்கள். அண்ணா நூலகம், கலைஞர் நூலகத்தில் செய்யாத ஊழலை பெரியார் நூலகத்தில் மட்டும் செய்வோமா என்பதுதான் அதன் அர்த்தம் ?
அவர்கள் காட்டும் ஆதாரம் முத்திரை. பெரியார் அறிவுலகத்தில் இருக்கும் உண்மையான பதிப்பக நூல்களில் எல்லாம் மார்ச் மாத முத்திரை இருக்கிறது. அது திமுக ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது.
ஆனால் போலி என்று சொல்லப்படும் நூல்களில் மட்டும் ஜூன் மாத முத்திரை இருக்கிறது.
அப்படியென்றால் அந்த போலி நூல்கள் எப்போது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? யார் ஆர்டர் கொடுத்தது? இதற்கு தான் விசாரணை வேண்டும் என்கிறது திமுக. இது வரை திமுகவின் விளக்கம் தெளிவாக இருக்கிறது.
கண்ணோட்டம் 2: டைம்லைன் மாற்றப்பட்டதா? எதை மறைக்க இந்த செய்தி? இங்கே தான் இரண்டாவது கண்ணோட்டம் ஆரம்பிக்கிறது. டைம்லைனை அப்படியே போட்டுப் பாருங்கள்.
நவம்பர் 4: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெரியார் அறிவுலகம் சென்று பார்வையிட்டார். அன்று மாலை பாராட்டு விழா.
அதற்கு அடுத்த நொடியே: ஒரு எழுத்தாளர் குறிப்பிட்ட தளத்தில் மட்டும் போய் பார்வையிட்டதாக செய்தி வருகிறது. அவர் சொன்னது புதிய தலைமுறை ஆசிரியர், சம்ஸ் தொகுப்பில் வருகிறது.
அதாவது ஒரே ஒரு தளம். ஒரே ஒரு பதிப்பகம். மொத்த நூலகத்தையும் பார்க்கவில்லை. குறிப்பிட்ட தளத்தை மட்டும் பார்த்துவிட்டு போலி நூல் கதை ஆரம்பிக்கிறது.
அடுத்த நொடியே என்ன நடந்தது? முதல்வர், முதல்வரின் கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வரை எல்லோரும் இந்த செய்தியை பற்றி கோரஷாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். தற்போதைய டைம்லைன் முழுவதும் இந்த செய்தி தான்.
“அப்போது மக்கள் கேட்கும் கேள்வி இது தான்: எதை மறைக்க இந்த செய்தி?” அந்த நேரத்தில் டைம்லைனில் இருந்த இரண்டு முக்கியமான செய்திகள் என்ன?
9 மீனவர்கள் மாயமானது – மீனவர்கள் இறந்த சோக செய்தி இன்று காலை வரை பேசப்பட்டு கொண்டிருந்தது. அதற்கு அரசு என்ன பதில் சொல்லும்? என்ன நடவடிக்கை எடுக்கும்? என்று மக்கள் கேட்டு கொண்டிருந்த நேரம்.
மற்றோன்று முதல்வர் நடிகையோடு திருமண நிகழ்வுக்கு சென்றது – முதல்வர் ஒரு நடிகையின் திருமண நிகழ்வுக்கு சென்று வந்தது அப்போது டைம்லைனில் பெரிய விவாதமாக இருந்தது. அதைப் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்த இரண்டு செய்திகளும் பேசப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் தான், திடீரென பெரியார் அறிவுலகம் போலி நூல் செய்தி முன்னுக்கு வந்து, டைம்லைனை மாற்றியது.
இது தற்செயலா? இல்லை திட்டமிட்ட டைம்லைன் மாற்றமா? இதை யாரும் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கேள்வி நியாயமாக இருக்கிறது.
ஏனென்றால், • ஸ்டாலின் சென்று வந்த பிறகு தான் இந்த செய்தி வந்தது. • முழு நூலகத்தையும் பார்க்கவில்லை. குறிப்பிட்ட தளத்தை மட்டும் பார்த்தார்கள். • அடுத்த நொடியே அரசு தரப்பு, கூட்டணி தலைவர்கள், அமைச்சர்கள் எல்லாம் இதையே பேசி வருகிறார்கள் . • மீனவர்கள் விவகாரமும், முதல்வரின் திருமண நிகழ்வு விவகாரமும் பின்னுக்கு போனது.
இறுதியான கேள்வி இரண்டு கண்ணோட்டத்தையும் சேர்த்து பார்த்தால் கிடைக்கும் முடிவு இது தான்
1. போலி நூல் இருக்கிறதா இல்லையா என்பதை விசாரணை தான் சொல்ல வேண்டும். மார்ச் முத்திரை, ஜூன் முத்திரை கோப்புகளை வெளியிட்டால் உண்மை தெரிந்துவிடும். 2. அதே நேரத்தில், இந்த செய்தி வந்த நேரமும், அது டைம்லைனை மாற்றிய விதமும் சந்தேகத்தை கிளப்புகிறது. மீனவர்கள் இறந்த செய்தியையும், முதல்வரின் திருமண நிகழ்வு செய்தியையும் மறைக்கவே இது பயன்பட்டதா? என்ற கேள்விக்கும் பதில் வேண்டும்.
பெரியார் அறிவுலகம் என்பது பெரியாரின் பெயர். அங்கே உண்மை தான் இருக்க வேண்டும். அது புத்தகத்தில் மட்டுமல்ல, செய்தியிலும் கூட.
போலி நூல்களை அகற்றுவதும் முக்கியம். உண்மையான செய்திகளை மறைக்காமல் இருப்பதும் முக்கியம்.
