Anbil Mahesh

”இந்த ஊழல் 400 கோடி இல்ல 1000 கோடிய தாண்டும்”… பள்ளிக்கல்வி துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து மேலும் பல பகீர் கிளப்பும் தகவல்களை பகிர்ந்துள்ள மதுரையைச் சேர்ந்த செந்தில் கண்ணன் என்பவர் பாதுகாப்பு கேட்டு மதுரை ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சென்னை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி இவரது வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஊழலில் தொடர்புடையவர்களின் முக்கியப் புள்ளிகளின் ரத்த உறவுகள் மற்றும் ஆதரவாளர்கள் வழியாக மறைமுக மிரட்டல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையிகல், ”தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தொடர்பான இந்த ஊழல் ஆரம்பத்தில் ₹100 கோடி என மதிப்பிடப்பட்டு, பின்னர் ₹400 கோடியாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது தரவுகளின் அடிப்படையில் இது ₹1,000 கோடிக்கும் அதிகமான ஊழல் என்பது தெரியவந்துள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் 1,717 தனியார் பள்ளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் டார்கெட் செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளன. முறையான பாதுகாப்புச் சான்றிதழ்கள் இன்றி பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்பட்டதன் மூலம் சுமார் 43 லட்சம் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படியுங்க  திமுக, அதிமுக சகாப்தம் க்ளோஸ்..!? தமிழ்நாட்டின் ‘பாகுபலி’ யார்? விஜய்யை வீழ்த்துமா அண்ணாமலையின் ‘சிங்கப்’ பாதை..?

இந்த வழக்கில் தொடர்புடைய பி.டி. அரசகுமார் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷின் அரசியல் உதவியாளர் முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் 13 குழந்தைகள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க குரல் கொடுத்ததற்காக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 2,21,000 ஆசிரியர்களுக்கான மாறுதல் (Transfer) நடவடிக்கைகளில் மிகப்பெரிய முறைகேடு அரங்கேறியுள்ளது.

நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 10,000 ஆசிரியர்கள் மாற்றப்படுகின்றனர்.
ஒரு ஆசிரியர் மாறுதலுக்குச் சராசரியாக ₹10 லட்சமும், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் போன்ற தென் மாவட்டப் பகுதிகளுக்கு ₹15 லட்சமும் லஞ்சமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடப்பதாகக் காட்டப்பட்டாலும், நடைமுறையில் எந்தப் பயிற்சியும் அங்கு நடைபெறுவதில்லை. மாறாக, மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயிற்சிகள் நடப்பதாகக் கூறி மாதந்தோறும் ₹50 லட்சம் வாடகை காட்டப்படுகிறது. இந்த வாடகை பில்களுக்கு ஒப்புதல் அளிக்க முக்கிய முதன்மை அதிகாரி ஒருவர் சமீபத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் லஞ்சமாகப் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்க  ”கோர்ட்டில் வெளியான பகீர் ரிப்போர்ட்! நீதிபதியின் நேரடி கேள்விக்கு அன்பில் மகேஷ் கொடுத்த பரபரப்பு பதில்!"

இந்த ஊழல் வலையமைப்பில் முன்னாள் மற்றும் இந்நாள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்பட சுமார் 200 முதல் 300 அதிகாரிகள் வரை தொடர்பில் உள்ளனர்.

முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன.
விசா பெறுவதற்காகச் சேகரிக்கப்பட்ட 70 முதல் 100 பேரின் பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் அடங்கிய முக்கியத் தரவுகள் அனைத்தும் சென்னை காவல் ஆணையாளர் மற்றும் விசாரணை அதிகாரியான அமல்ராஜ் ஐயா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *