Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Aniruth

” பார்ப்பன எதிர்ப்பே எங்கள் உயிர்மூச்சு… சுயமரியாதமே எங்கள் சுவாசம்!” – மேடைதோறும் இப்படி முழங்கிய திராவிடப் பட்டறையின் சுவர்களில் இப்போது விரிசல் விழுந்திருக்கிறது. விரிசல் அல்ல… பிளவு!

ஒன்று திராவிட பட்டறையில் வேதங்கள் முழங்க நடந்தேறிய திருமணம் – அடுத்து திராவிட பட்டறையயை உருவாக்கியவரின் பேத்தியையே  ஆரியரே கரம் பிடிக்க போற திருமணம்…

1 – திராவிட பட்டறையில் வேதங்கள் முழங்க நடந்தேறிய திருமணம் ,.!

நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடந்தேறியது துரைமுருகனின் பேத்தி செந்தாமரை – தீபக் ரவி திருமணம். நடந்தது சாதாரண திருமணம் அல்ல… அக்னி வளர்த்து, புரோகிதர்கள் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க, அஷ்டலட்சுமிகள் வரவேற்க நடந்த பக்கா வைதீகத் திருமணம்!

யார் இந்த துரைமுருகன்? அண்ணாவின் கொள்கை முழக்கமாய், கலைஞரின் நிழலாய் அரை நூற்றாண்டு திராவிட அரசியலில் நின்றவர். பெரியாரின் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர். `சமஸ்கிருத மந்திரம் ஒலிக்காத திருமணமே திராவிடத் திருமணம்’ என்று மேடைதோறும் கர்ஜித்த பரம்பரை அது.

இதையும் படியுங்க  Everything You Wanted to Know About mega city\'s

வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் – சங்கீதா தம்பதியின் மகள் செந்தாமரைக்கும், திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி – தீபா தம்பதியின் மகன் தீபக் ரவிக்கும்தான் இந்தத் திருமணம்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர் படங்கள்… மேடையிலோ வைதீகச் சடங்குகள்! இந்த முரண்தான் பகுத்தறிவாளர்களின் நெஞ்சைப் பிளக்கிறது.

“வலிக்கிறது இதயம்!” என்று எக்ஸ் தளத்தில் வேதனையைக் கொட்டியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அவருடன் சேர்ந்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியனும் குமுறியிருக்கிறார். “வெட்கமில்லையா துரைமுருகனுக்கு?” என்று சீறுகிறார் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன்.

“ஆட்சி அதிகாரத்துக்கு மட்டும் அண்ணா வேண்டும்… பேத்தி கல்யாணத்துக்கு ஆரியமா?” என்கிற கேள்வி களத்தில் தீயாய் பரவுகிறது.

ரூ.25 ஆயிரம் மதிப்பிலான அழைப்பிதழ், தங்க விநாயகர் சிலை, ரூ.100 கோடி மதிப்பிலான நகை – பரிசுகள்… இதனைக் கண்ட எளிய உடன்பிறப்பின் நெஞ்சில் இவை ஈட்டியாய் இறங்கியிருக்கின்றன.

இதையும் படியுங்க  சம்பளமே வேண்டாம்..! அதிரவைக்கும் அல்லு அர்ஜுனின் டீல்..! வாயடைத்துப் போன இந்திய சினிமா..

“அந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த அதிர்வு! திராவிடப் பட்டறையிலேயே கை வைக்கப்பட்டுள்ளது” 

2 – திராவிட பட்டறையயை உருவாக்கியவரின் பேத்தியையே  ஆரியரே கரம் பிடிக்க போற திருமணம்..!

திராவிடப் பட்டறையை உருவாக்கிய கலைஞரின் கொள்ளுப் பேத்தியைக் கரம் பிடிக்கிறார் பார்ப்பனரான இசையமைப்பாளர் அனிருத்! `கொலவெறி’ புகழ் அனிருத் ரவிச்சந்தர் – நடிகர் ரவிச்சந்தரின் மகன், பார்ப்பனக் குடும்பப் பின்னணி கொண்டவர். அவருக்கும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

காவ்யா யார்? முரசொலி மாறனின் பேத்தி, கலைஞர் கருணாநிதியின் கொள்ளுப் பேத்தி! தி.மு.க-வின் ரத்த நாளங்களில் ஒன்றான குடும்பத்தின் வாரிசு.

நவம்பர் 10, 11-ல் கிரீஸ் நாட்டில் திருமணம், நவம்பர் 21-ல் சென்னையில் பிரமாண்ட வரவேற்பு. ஒரு அழைப்பிதழின் விலையே ரூ.20 ஆயிரம். திராவிடக் கொள்கைக்கு எதிர் துருவங்களான பிரதமர் மோடி, ரஜினி முதல் முதல்வர் விஜய் வரை அத்தனை பேருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் கலாநிதி மாறன்.

இதையும் படியுங்க  சினிமா போரடித்து விட்டது..! 11 ஆண்டு கால வனவாசத்தை உடைத்த 'காதல் தேசம்' அப்பாஸ்..!

பழைய பக்கங்கள் புரள்கின்றன…

கலைஞர் முதல்வராக இருந்தபோது, பன்னாரியம்மன் கோவிலில் தீ மிதித்த அமைச்சரை `காட்டுமிராண்டித்தனம்’ என்று சொல்லி அமைச்சரவையில் இருந்தே நீக்கியவர் அவர். பார்ப்பன எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டு பட்டறை நடத்தியவர்.

ஆனால் இன்று… மேடைதோறும் சமூகநீதி முழங்கும் கழகத்தின் வீட்டுத் திருமணங்களில் வேத மந்திரங்கள் முழங்குகின்றன. எஸ்.வி.சேகரின் தந்தை பெயரில் சென்னை தெருவுக்குப் பெயர் சூட்டியது முதல் இன்றைய வைதீகத் திருமணங்கள் வரை சுயமரியாதைக் கொள்கை மெல்ல மழுங்குகிறதோ என்ற வலி தொண்டர்களின் இதயத்தை அறுக்கிறது.

கொள்கைக்காக வாழ்ந்தவர்கள் வீட்டிலேயே கொள்கை தோற்றால், திராவிடக் கொள்கையை விதைக்க வெயிலிலும் மழையிலும் களத்தில் நிற்கும் தொண்டன் எதை நம்புவான்?.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago