Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Bullet Train

மணிக்கு 320 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக புல்லட் ரையல் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது.இந்த புல்லட் ரையிலின் வழித்தடம் கடலுக்கு அடியிலும் அமைக்கப்பட இருப்பதாக பிரம்மிக்க வைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த புல்லட் ரயில் எங்கு அமைய உள்ளது? எப்போது பயன்பாட்டுக்கு வர உள்ளது? இதன் சிறப்பு அம்சங்கள் என்ன?

அதிவேகமாக செல்லக்கூடிய ரயில்களைதான் புல்லட் ரயில்கள் என்று அழைக்கிறார்கள். இந்த ரயிலின் முன்புற பகுதி கூம்பு வடிவத்தில் கூர்மையாக இருப்பதால் இந்த ரயிலுக்கு புல்லட் ரயில் என்ற பெயர் கிடைக்க பெற்றுள்ளது. முதலில் ஜப்பானில் அறிமுகமான இந்த ரயில் சேவை அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், சீனா, தென்கொரியா, தைவான், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளிலும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகின்றது.

இந்த ரயில் சேவை எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்று பல்வேறு தரப்பினர் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான பல்வேறு சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில் சுமார் 508 கி.மீ தூரத்திற்கு மிகப்பெரிய புல்லட் ரயில் சுரங்க பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகின்றது.

இதையும் படியுங்க  பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்: இந்திய ரயில்வேயின் புதிய இலவச திட்டம் என்ன தெரியுமா?

இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக மும்பை நகருக்குள் இருக்கும் போக்குவரத்து நெருசலை தவிர்க்க பந்தாரா குருளா விளாகத்திலிருந்து சில்வாடா பகுதி வரை சுமார் 21 கிமீ தூரத்திற்கு சுரங்க பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 7 கி.மீ தூரம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க பாதையானது பூமி மற்றும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 25 முதல் 55 மீட்டர் ஆழத்தில் மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த புல்லட் ரையல்கள் அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவு அதிகம் என்பதை கூற வேண்டும் என்றால், உதாரணத்திற்கு சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்ல வெறும் இரண்டு மணி நேரம்தான் ஆகும். அந்த அளவிற்கு வேகமான ரயிலாக இது உருவாகி வருகின்றது. நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பை முதல் அகமதாபாத் வரையிலான முழுமையான வழித்தடமும் 2030க்குள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படியுங்க  இந்தியாவை சும்மா விடக்கூடாது..! 65 ஆண்டுகால ஒப்பந்தம் க்ளோஸ்..! மோடியின் மரண அடியால் அலறும் பாகிஸ்தான்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago